பிரதான செய்திகள்

புத்தளம் தேர்தல் தொகுதி SLMC சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கு கௌரவ நிகழ்வு ஹகீம் தலைமையில்.

புத்தளம் தேர்தல் தொகுதியில் ,புத்தளம் மாநகர சபை, புத்தளம் பிரதேச சபை ,கற்பிட்டி பிரதேச சபை வண்ணாத்திவில்லு பிரதேச சபை ஆகியவற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு 9 உறுப்பினர்களை வெற்றி கொண்டதையிட்டு கௌரவிப்பு நிகழ்வு நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் தலைமையில் புத்தளம் கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

புத்தளம் தொகுதி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ரணீஸ் பதுறுதீன், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ் .எச். எம். நியாஸ் ,உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,புதிதாக தெரிவான உறுப்பினர்கள் ,வேட்பாளர்கள் ,கட்சி முக்கியஸ்தர்கள் ஆகியோர் பங்கு பற்றியதோடு,கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள், ஏனைய முக்கிய விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related posts

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர்களை சந்தித்த றிஷாட்

wpengine

எழுச்சி அரசியலிலுள்ள யதார்த்தங்கள் எடுகோள்களால் தீர்மானிக்கப்படுகிறதா?

wpengine

2023 A/L பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Editor