(இர்ஷாத் றஹ்மத்துல்லா )
புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் தேவைப்பபாடுகள் தொடர்பில் எனது கவனத்தை செலத்துவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் புத்தளம் விஞ்ஞானக் கல்லுாரி மாணவன் புத்தளத்துக்கு பெறுமை தேடி தந்தது போன்று இந்த பாடசாலையும் சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.
புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச.எம்.நவவி,வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.ரீ.தாஹிர்,எஸ்.எச்.எம்.நியாஸ்,முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் இணைப்பாளருமான டாக்டர் இலயாஸ்.அமைச்சரின் புத்தளம் மாவட்ட இணைப்பு செயலாளர் எ.ஆர்.அலி சப்ரி,புத்தளம் மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்.ஏ.ஓ.அலிகான்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.என்.எம்.ஜவுபர் மரைக்கார்,புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக்,தொழிலதிபர் எம்.றியாழ் ,கல்வி பணிப்பாளர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையில் கூறியதாவது –
மாணவ சமூகத்தின் கல்வி மே்பாடு தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.சில பாடசாலைகள் பழமை வாய்ந்த நிலையிலேயே உள்ளன.இலங்கையில் உள்ள 800 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன.அவற்றினை நிலையினை ஆராயும் வகையில் நாம் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளோம்.
கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் உள்ள கல்வியாளர்ளை அதனது ஆலோசகர்களாக நியமித்துள்ளோம்.இதன் மூலம் மாணவ சமூகத்தின் கல்விக்கான அடிப்படை நடவடிக்கையினை எடுக்கவுள்ளோம்.
இந்த வகையில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மார்க்கத்தின் அடிப்படையில் செயற்பட தேவையான அடித்தளத்தினை இட வேண்டியது அவசியமானது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இதன் போது கூறினார்.
பாடசாலையின் பணகளுக்கு தம்மை அர்ப்பணம் செய்துவரும் பாடசாலையின் அதிபர் மற்றும் இப்போட்டிகளை நடத்துவதற்கு முழுமையான அனுசரனை வழங்கிய தொழிலதிபர் அல்ஹாஜ்.எஸ்.ஏ.எம்.றியாழ் ஆகியோருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதின் நினைவுச் சின்னங்களை வழங்கியதுடன்,பாடசாலையின் புதிய நிர்வாக கட்டிடத்தினையும் திறந்த வைத்தார்.