பிரதான செய்திகள்

புத்தளம்-கொய்யாவாடி பிரச்சினை முன்று பொலிஸ் முறைப்பாடு! ஞாயிறு விசாரணை

(அபு)

புத்தளம் மாவட்டத்தில் கொய்யாவாடி ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாகத்தின் செயலாளர் கடந்த வெள்ளிக்கிழமை உழ்ஹிய்யா விடயத்தில் பள்ளிவாசலில் வைத்து உறுப்பினரை தாக்கிய அசம்பாவிதம் சமாதான குழுவின் ஊடாக இன்று ஜூம்மா தொழுகையின் பின்பு தற்காலிக தீர்வுக்கு வந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த பிரச்சினை தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாக பொறுப்பில் உள்ள செயலாளர்,தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகியோர்கள் நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மான கருத்து முரண்பாடு காரணமாக பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடுகளை செய்துள்ளார்கள், எனவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த பிரச்சினையினை தீர்க்க கூடிய செயலாளர் உறுப்பினரை தாக்கி விட்டு நூறைச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்யாமல் புத்தளம் வைத்தியசாலையில் சேர்ந்து கொண்டார், அது போல  தாக்கப்பட்ட உறுப்பினரின் உறவினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீர்வினை கேட்க வந்த வேலை 3 இளைஞர்கள் மீதும் பிரச்சினை இடம்பெற்ற வேலை அந்த இடத்தில் இல்லாத முன்னால் தலைவர் மீதும் போலியான பொய் முறைப்பாட்டினை பள்ளிவாசல் தலைவர் தனது செல்வாக்கினை பயன்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

இது தொடர்பிலான விசாரணை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற உள்ளது என்றும் இன்று கொய்யாவாடி ஜூம்மா தொழுகைக்கு பள்ளிவாசல் தொழுகைக்கு தலைவர்,செயலாளர் சமுகமளிக்கவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினையினை சுமுகமான நிலையில் தீர்க்க கூடிய பள்ளிவாசல் தலைவரும்,செயலாளரும் பொலிஸ் நிலையம் வரைக்கும் கொண்டு சென்றுள்ள செயற்பாட்டை சமூக ஆர்வலர்கள் கண்டனத்தை தெரிவிக்கின்றார். எனவும் அறியகிடைத்துள்ளது.

Related posts

31 Counties Diplomat visited Polannurava Remote areas

wpengine

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மன்னாரில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

wpengine

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இராணுவம் காட்டுமிராண்டி தனம்! அமைச்சர் றிஷாட் கண்டனம்

wpengine