புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுவில் உள்ள கொய்யாவாடி,அரபா நகர் கிராமத்தில் நேற்று (18/08) ஜூம்மா தொழுகையின் பின்பு உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பான விடயத்தில் பள்ளிவாசல் செயலாளர் சுயநலமாக சில முடிவுகளை எடுத்து கூறிய வேலை அதனை ஏற்றுக்கொள்ளாத ஊர் மக்களும்,ஏனைய நிர்வாகிகளும் இது தொடர்பில் செயலாளரிடம் வினவிய வேலை செயலாளர் உடனான குழுவினர்கள் கேள்வி கேட்கவந்த உறுப்பினரை கேவலமாக பேசியும்,அவர் மீது தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.என அறிய முடிகின்றது.
இதன் காரணமாக கொய்யாவாடி கிராமத்தில் நேற்று மாலையில் இருந்து இரவு வரைக்கும் அசாதாரண நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த பள்ளிவாசலின் செயலாளர் ஒரு ஆசிரியர் என்றும்,இவர் தற்போது நுரைச்சோலை பாடசாலையில் ஆரிசியராக கடமையாற்றுகின்றார், என்றும் இது போன்று இவர் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தனமாக செயற்படுகின்றாரா? என கேள்விகளும் எழுவதாக பிரதேச கிராம மக்கள் பேசிக்கொண்டனர்.
நிர்வாக உறுப்பினரை தாக்கிய செயலாளரும்,ஏனைய நிர்வாக உறுப்பினரும்,சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ள காரணமின்றி போலியான குற்றச்சாட்டுகளை சொல்லி வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார்கள் என்றும் அறிய முடிகின்றது.
ஊர் மக்கள்,நிர்வாக உறுப்பினர்கள் கேள்விகளை கேட்ட போது உரிய பதில்கள் வழங்காமல் காட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்ட பள்ளிவாசல் செயலாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏனைய நிர்வாக உறுப்பினர் கையொப்பம் வைத்த கோரிக்கையினை விடுத்துள்ளார்கள் என்றும் அறியமுடிகின்றது.