(அபு)
புத்தளம்,கொய்யாவாடி ஜூம்மா பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற அசம்பாவிதத்தினை தொடர்ந்து மீண்டும் இன்றும் மஃரீப் தொழுகையின் பின்பு பாதிக்கப்பட்ட நிர்வாக உறுப்பினரின் சகோதர்கள்,ஊர் நலன் விரும்பிகள்,இளைஞர்கள் ஒன்றுகூடி தீர்வினை கேட்ட வேலை பள்ளிவாசல் தலைவரின் தான்தோன்றி தனமான கருத்தின் காரணமாக மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
கொய்யாவாடி பள்ளிவாசல் தலைவர் கருத்து தெரிவிக்கையில் செயலாளரை நீக்கமுடியாது என்றும்,நான் நினைத்ததை போன்று தான் நிர்வாகம் செய்வேன் என்றும்,ஒரு சில நிர்வாக உறுப்பினர்கள், ஊர் மக்கள் இளைஞர்களின் கோரிக்கையான செயலாளரை மாற்ற வேண்டும் அல்லது அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை கேட்காமல் தான் நினைத்தபடி தான் செயற்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார். என அறியமுடிகின்றது.
இதன் போது நிர்வாக உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவியது தலைவருக்கும்,செயலாளருக்கும் இருக்கின்ற நெருக்கமான உறவின் காரணமாக பக்கசார்பாக நடக்கின்றார் என்றும்,நாங்கள் தெரிவிக்கின்ற கருத்துகளையும்,ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் தான் நினைத்தபடி செயற்படுகின்றார் என்றும் தெரிவித்தார்.
இதில் ஊர் மக்களிடம் பணம் வசூல் செய்து ஒரு தொகை பணத்தில் மையவாடி சுற்றுமதி கட்டுகின்றேன் என்று சொல்லி தெரிந்த செயலாளார் இதுவரைக்கும் ஊர் மக்களுக்கும்,பள்ளி நிர்வாகத்திற்கும் கணக்கு காட்டவில்லை என்ற குற்றசாட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் முழுமையான தீர்வினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். தீர்வு கிடைக்கவில்லையென்றால் மீண்டும் ஒரு சண்டை ஏற்படலாம் என எதிர்பாக்கப்படுகின்றது.
இது தொடர்பில் புத்தளம் மாவட்ட உலமா சபை ஒன்று கூடிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.