செய்திகள்பிரதான செய்திகள்

புத்தளத்தில் ரத்தகாயங்களுடன் வீதியில் ஓடிய மனைவியும் மகளும், வைத்தியசாலை அனுமதித்தபின் மனைவி மரணம்.

புத்தளம் ஹஸ்திபுர பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (7) நண்பகல் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் புத்தளம், கல்லடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

மியன்மாரின் காட்டுமீராண்டி தனத்திற்கு எதிராக ஒட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்

wpengine

பிரான்சில் இருந்து இந்தியா சென்று கடல் மூலம் இலங்கை செல்ல முயன்ற இரு புலம்பெயர் தமிழர் கைது .

Maash

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு வாகன விபத்துக்களால் 6பேர் உயிரிழப்பு

wpengine