பிரதான செய்திகள்

புத்தளத்தில் சிறுவன் கடத்தல்: இந்தியப் பிரஜை, இரண்டு பெண்களுக்கு விளக்கமறியல்

புத்தளத்தில் வான வீதி பகுதியில் சிறுவனொருவன் கடத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் புத்தளம் பதில் நீதவான் எம்.எம். இக்பால் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அவர்களில் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்தியப் பிரஜையொருவரும் இரண்டு பெண்களுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதிக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

வண்ணாத்திவில்லு பகுதியிலிருந்து முச்சக்கரவண்டி மூலம் சிறுவனை சந்தேகநபர்கள் புத்தளத்திற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோதே சிறுவன் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்

சந்தேகநபர்களான பெண்கள் இருவரும், இந்திய பிரஜையும் வண்ணாத்திவில்லு பகுதியில் சிறுவனை மறைத்து வைத்திருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

நல்லாட்சியின் பின்னால் இருந்து கொண்டு தவறு செய்ய இடமளிக்கப்படாது!

wpengine

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் கருணா

wpengine

கருச்­சி­தைவு சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­திக்­கப்­பட வேண்­டுமா? இல்­லையா?

wpengine