பிரதான செய்திகள்

புத்தளத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

புத்தளம், விருதோடை பிரதேச வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விருதோடை சேனைக்குடியிருப்பு பகுதியிலுள்ள இறால் பண்ணைக்கு அருகிலுள்ள வீடொன்றில் காவலாளியாக பணிபுரிந்த ஒருவரே வீட்டினுள் இருந்து நேற்று (28) மாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு சென்றிருந்தபோது வீட்டின் காவலாளிகள் இருவரும் அங்கு பணியில் இல்லாததை அறிந்து, அவர்கள் தொடர்பில் தேடிப் பார்த்தபோது வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அங்கு விரைந்த பொலிஸார் வீட்டின் கதவை உடைத்து உட்சென்று பார்த்தபோது காவலாளிகளில் ஒருவரது அழுகிய சடலத்தை மீட்டுள்ளனர்.

நிக்கவெரட்டிய பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் மற்றுமொரு காவலாளியான சுமார் 30 வயதுடைய நபர் தலைமறைவாகியுள்ளதுடன், அவர் தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

ஷிப்லி பாறுக் வாகரை – புதிய நகர் ஐக்கிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.

wpengine

மீண்டும் மு.காவில் இணைந்த புத்தளம் பாயிஸ்

wpengine

ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு இந்திய மத்திய அரசு 5 வருட தடை விதிப்பு

wpengine