பிரதான செய்திகள்

புத்தரை அசிங்கப்படுத்தி விட்டு! முஸ்லிம்களுடன் வம்புக்கு வந்தார்கள் வியாபாரிகள் கவனம்

தற்போது டிசம்பர் மாதத்திற்குரிய வியாபார நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், முஸ்லிம் வியாபாரிகள் மிகுந்த பொறுப்புடனும், அவதானமாகவும் செயற்பட வேண்டுமென முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதுகுறித்து முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த காலங்களில் முஸ்லிம் கடைகளுக்கு வந்து சாமான் வாங்கிச்சென்ற சிலர், மீண்டும் அவற்றை கொண்டுவந்து கொடுத்தபோது அவற்றுக்குள் புத்தரை அசிங்கப்படுத்தும் விடயங்கள் காணப்பட்டன. அவர்களே திட்டமிட்டு இதைச் செய்துவிட்டு, முஸ்லிம்களுடன் வம்புக்கு வந்தனர்.

இது மிகப்பெரும் அனுபவம். முஸ்லிம்களுக்கு வம்பு கொடுக்க முயலுபவர்கள் இவ்வாறான அல்லது இதையொத்த செயற்பாடுகளில் மீண்டும் இறங்கலாம். எனவே நாம் விழிப:புடன் செயற்பட வேண்டும்.

எக்காரணம் கொண்டும் நிதானமிழக்காது உரிய தரப்பினரை அணுகி, பிரச்சினைகளை சுமூகமாக்கிக் கொள்வதே சிறந்தது.

இதுதொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகங்கள், ஊர் ஜமாத்துக்கள், முஸ்லிம் நிறுவனங்கள் பிரதேச முஸ்லிம்களை விழிப்புடன் செயற்பட ஊக்கப்படுத்துவதும் அவசியமெனவும் அமீன் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

4 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற உயர் அதிகரிகள் இருவர் கைது!

Editor

அமைச்சர் சமலின் திணைக்களத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி

wpengine

பொற்பணி புரிந்த மேதை எம்.எச்.எம். அஷ்ரப்! சுஐப். எம். காசிம்

wpengine