புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர், புதுக்குடியிருப்பு, கைவேலி கிராமத்தில் அமைந்துள்ள ‘சுயம்’ என அழைக்கப்படும், வறிய நிலையில் உள்ள பெண்களினால் ஒன்றிணைந்து நடாத்தப்படும் உணவுப் பொருட்கள் உற்பத்தி நிலையத்தினை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்காக ரூபா 25000/- நிதியுதவியினை வழங்கியுள்ளனர்.
நேற்று (25.04.2017) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந் நிகழ்வில் மேற்படி உதவித் தொகையினை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் பொருளாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான க.சிவநேசன் (பவன்) அவர்கள் ஜேர்மன் கிளை சார்பாக வழங்கியிருந்தார். கட்சியின் செயற்குழு உறுப்பினர் (முல்லைத்தீவு மாவட்டம்) திரு. க.தவராசா அவர்களும் இந் நிகழ்வில் பங்குபற்றியிருந்தார்.




