பிரதான செய்திகள்

‘புதிய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள்’

பழைய முறையில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படுவதை தமது கட்சி எதிர்ப்பதாகவும், புதிய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில், பழைய விருப்பு வாக்கு முறையை எதிர்ப்பதாக நாங்கள் கூறினோம். இதனால், புதிய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துங்கள். 70 வீதம் தொகுதி வாரியாகவும் 30 வீதம் விகிதாசார அடிப்படையிலும் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வேண்டும். இவ்வாறான கலப்பு முறையிலேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

20ஆவதுக்கு பௌத்த பிக்குகள்,இன்னும் எதிர்ப்பு! ஜனாதிபதி அவசர அமைச்சரவை கூட்டம்

wpengine

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் மீண்டும் விவாதம்

wpengine

ரஷ்யா- உக்ரைன் ஐ.நா. தீர்மானம்! இலங்கை புறக்கணிப்பு

wpengine