அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் : வர்த்தமானி வெளியீடு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்தை நிரப்ப நிஷாந்த ஜயவீரவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் இந்தப் பெயரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளார்.

அதன்படி, வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நிஷாந்த ஜயவீரவின் பெயரை வர்த்தமானியில் வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராகப் பணியாற்றினார், பின்னர் தனது பதவியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்வதற்காக அவர் இவ்வாறு ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

wpengine

மட்டக்களப்பு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குடிநீரை வழங்க முடியவில்லை

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்ட மு.கா.கட்சியின் வேட்பாளர்

wpengine