Breaking
Sat. Nov 23rd, 2024

(அஸீம் கிலாப்தீன் )

நொச்சியாகம பிரதேச செயலகத்திற்கு உட்பட அ / நொச்சியாகம அல்-ஹிக்மா பாடசாலையில் மிக நீண்ட காலமாக பாடசாலை சுற்றுமதில் சம்மந்தமாக காணப்பட்ட பிரச்சினைக்கு அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.

அனுராதபுர மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக விளங்குகின்ற இப்பாடாசாலைக்கும் அருகில் இருக்கின்ற சிங்கள மொழி மூலமான பாடசாலைக்கும் இடையில் மிக நீண்டகாலமாகவே எல்லைப்பிரச்சனை காணப்பட்டது.

இதனால் அல்-ஹிக்மா பாடசாலை சமூகம் தங்களது பாடசாலையின் எதிர்கால நலன் கருதியும் பாடசாலை வளாகத்தின் பாதுகாப்பிற்காகவும் பாடசாலைக்கான சுற்றுமதில் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதற்கான நிதியினை பெடுக்கொள்வது சம்மந்தமாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானுடன் தொடர்புகொண்டிருந்தனர்.

/p>

இப்பாடசாலையின் நிலமையை அறிந்துகொண்ட அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது சொந்த நிதியிலிருந்து இச்சுற்றுமதில் அமைப்பதற்கான நிதியினை பெற்றுக்கொடுத்ததொடு இதற்கான வேலைத்திட்டங்களையும்  நேற்று13.05.2018  ஆரம்பித்து வைத்தார்.

இன் நிகழ்வின் உரையாட்டிய  பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்

சிறுபான்மை இனமாக நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எமது முஸ்லிம் சமூகம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் முக்கியமான ஒன்றாக காணப்படுவது பாடசாலை வளப்பற்றாக்குறை, கட்டிட வசதிகைளின்மையாகும்.

சமூகத்தில் காணப்படும் இப்பிரச்சினைக்ளுக்கான எப்படியாவது தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளுக்கு சென்று, பல தனவந்தர்களை சந்தித்து அவர்களின் உதவிகள் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் சில பின்தங்கிய பாடசாலைகளுக்கு கட்டிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். எனது இந்த முயற்சியின் பிரகாரம் இன்னும் சில கட்டிட வசதிகளை வெளிநாட்டு தனவந்தர்கள் சிலர் நம் நாட்டு மக்களின் கல்விக்கு உதவி செய்யும் நோக்கில் சில கட்டிடங்களை நிர்மாணித்து தருவதாக என்னிடம் வாக்குறுதி அளித்துள்ளார்கள்.

அந்தடிப்படையில் இனிவரும் கட்டிட நிர்மாணங்களில் நிச்சயமாக நொச்சியாகம அல்-ஹிக்மா பாடசாலையிலும் ஓர் கட்டிடத்தை நிர்மானிப்தற்கான ஏற்பாடுகளையும் தான் செய்வேன் என்றும், அதற்கான பூரண ஒத்துழைப்பையும் மக்களிடமிருந்து தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *