பிரதான செய்திகள்

புதிய அமைச்சருக்கு மன்னாரில் வரவேற்பு

வட மாகாணசபையின் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள டெலோவின் மாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலனுக்கு மன்னாரில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக பதவியேற்றுக் கொண்ட அவர் நேற்று மாலை மன்னாருக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது மன்னார் – தள்ளாடி சந்தியில் வைத்து மாவட்ட இளையோர்கள் மற்றும் பொது அமைப்பினர் இணைந்து சிறப்பு வரவேற்பினை வழங்கியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து மன்னார் நகர மத்தியில் உள்ள தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலைக்கு அவர் மாலை அணிவித்திருந்தார்.

 

அத்துடன், மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அலுவலகத்துக்குச் சென்று டெலோவின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் போராளிகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.

மேலும், தொடர்ந்து தாழ்வுப்பாடு கிராமத்தில் மக்கள் சந்திப்பொன்று நடத்தப்பட்டதுடன், இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

தோப்பூரில் பள்ளியினுள் ஒருவர் வெட்டிக் கொலை!

wpengine

நல்லிணகத்தை ஏற்படுத்த சவால்களை முறியடிக்கும் முன்மாதிரி யாழ் ரயில் பயணம்

wpengine

உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி – 20க்கு அதிகமானோர் காயம்!

Editor