பிரதான செய்திகள்

புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” நடத்தும், “கௌரவிப்பு விழா”

புங்குடுதீவு தாயகம், சொக்கலிங்கம் அக்கெடமியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை, மற்றும் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளை கௌரவப்படுத்துவதுடன், மாற்றுத் திறனாளிகள் சிலரும் “தாயகம் சமூக சேவை அகத்தினால்” கௌரவப்படுத்தப்பட உள்ளார்கள்.

மேற்படி விழாவில் புங்குடுதீவு முன்பள்ளி மாணவ, மாணவிகள், & ஆசிரியர்களும், “அமரர் கந்தையா தனபாலன்” ஞாபகார்த்தமாக, அவரது குடும்பத்தினரால் கௌரவப்படுத்தப்பட உள்ளார்கள்.

இதேபோல் புலமைப் பரிசில் பரீடசையில், புங்குடுதீவில் அதிகூடிய புள்ளி பெற்ற, புங்குடுதீவு ஸ்ரீ கணேச மஹா வித்தியாலய மாணவி செல்வி. விஜயகுமாரசர்மா ஐஸ்வர்யா அவர்களுக்கு, “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில், “பணமுடிப்பு” வழங்கிக் கௌரவப்படுத்தல்..
அத்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளது.

இடம்..: அம்பலவாணர் கலையரங்கம், புங்குடுதீவு.
காலம்..: 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை, காலை 09.00 மணிக்கு…
“அனைவரும் வருக.. ஆதரவு தருக”..
இவ்வண்ணம்.
செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு,
செயலாளர்,
“தாயகம் சமூக சேவை அகம்” புங்குடுதீவு.

Related posts

மனைவியினை தாக்கிய கணவன்! விளக்கமறியல்

wpengine

இரா.சம்பந்தனுக்கு வீடு வழங்கிய ரணில், மைத்திரி

wpengine

சமூகத்தின் குரலாக செயற்படும் ஊடகங்களுக்கு கைகொடுப்பது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும்- என். எம். அமீன்

wpengine