பிரதான செய்திகள்

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, புனரமைக்க பார்வையீட்ட மாகாண உறுப்பினர்

(ஊடகப்பிரிவு  திரு.விந்தன் கனகரெட்ணம்)
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலம் புனரமைக்கப்படும் யாழ். புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயத்தை மாகாண அதிகாரிகள் சகிதம் பார்வையிட்டார் என். கனகரட்ணம் விந்தன்.

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள், “புங்குடுதீவு சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பாக, கடந்த வருடம் யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) யாழ். தீவுப்பகுதி அமைப்பாளருமான என். கனகரட்ணம் விந்தன் அவர்களிடம் யாழ். புங்குடுதீவு பகுதியில் அமைந்துள்ள ஊரைதீவு கிராமத்தில் உள்ள திருநாவுக்கரசு வித்தியாலயத்தைப் புனரமைத்து மீளத் திறந்து  அப்பகுதி மாணவர்களின் கல்வி மேம்பாட்டை உயர்த்தும்படி கோரியிருந்தார்.

இதற்கமைய கனகரட்ணம் விந்தன் அவர்கள் கடந்த வருடம் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் திரு. த. குருகுலராஜா தலைமையில் நடந்த கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் இவ்விடயத்தைப் பல தடவைகள் பிரஸ்தாபித்து, அமைச்சு ஆலோசனைக் குழுவால் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, பாடசாலைக் கட்டடத்தைப் புனரமைப்பதற்கான மதிப்பீட்டினை வடக்கு மாகாண கல்வித் திணைக்களப் பொறியியலாளர் திரு. சுரேஸ் அவர்களால் நான்கு மில்லியன் (நாற்பது இலட்சம்) செலவு விபரம் என மதிப்பீடு செய்யப்பட்டு, 2017ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் பாதீட்டில் உள்ளடக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது.

கட்டட புனரமைப்பு வேலைக்கான ஒப்பந்தத்தினை வடக்கு மாகாண கட்டடத் திணைக்களம் பொறுப்பெடுத்து திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு. ஜெயசீலன் தலைமையில் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு, தொண்ணூறு வீதம் வேலைகள் நிறைவடைந்த நிலையில்,
17.11.2017 அன்று வேலைத்திட்டத்தின் முன்னேற்றங்களை, வடக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) யாழ். தீவுப்பகுதி அமைப்பாளருமான என்.கனகரட்ணம் விந்தன் நேரில் சென்று பார்வையிடுவதனைப் படங்களில் காணலாம்.

Related posts

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி உருவாக்க நாமல் கடும் முயற்சி

wpengine

Mozilla Firefox பயண்படுத்துவோருக்கு எச்சரிக்கை

wpengine

ஜெனீவா சுற்றி வளைப்புக்குள் இலங்கை அரசு? கடைசி யுக்தியுடன் அரசு தயார்!

wpengine