பிரதான செய்திகள்

புகையிரத கடவையை மறித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் (விடியோ)

புத்தளம் – வேப்பமடு – விலத்துவ வீதியை முழுமையாக புனரமைக்குமாறு கோரி அருவாக்காடு புகையிரத கடவையை மறித்து ஆர்ப்பாட்டமொன்று நேற்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளில் மாத்திரமே புனரமைப்புப் பணிகள் இடம்பெறுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டினர்.

மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியின் வீதி புனரமைக்கப்பட்ட வண்ணமிருந்த போதிலும் மக்களின் எதிர்ப்பினால் அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.

மக்களின் எதிர்ப்பைக் கேள்வியுற்று அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அங்கு வருகை தந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

எனினும், வேப்பமடு – விலத்துவ வீதியை முழுமையாக புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிடின், தற்போது மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளுக்கு இடமளிக்கப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

Related posts

”வடக்கு முஸ்லிம்களை வேற்றுக்கிரக வாசிகளாக விரட்டித்திரியும் வல்லூறுகள்”

wpengine

நான் யாரையும் தாக்கவில்லை! தாக்கி இருந்தால் சத்திரசிகிச்சைக்கு சென்று இருப்பார்.

wpengine

மீண்டும் 4 புதிய அமைச்சரை நியமித்த கோத்தா

wpengine