பிரதான செய்திகள்

பி.பீ ஜயசுந்தர பதவி விலகவேண்டும் என்று சமல் ராஜபக்ச வலியுறுத்த விடுத்தார்.

பி.பீ ஜயசுந்தர தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு அமைச்சர் சமல் ராஜபக்ச வீட்டில், அனைத்து ராஜபக்சர்களும் ஒன்று கூடியதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.பீ ஜயசுந்தரவை ஜனாதிபதியின் செயலாளராக நியமித்தமைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பொறுப்பாகும் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இன்றைய பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு பி.பீ ஜயசுந்தரவின் செயற்பாடுகளே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் தற்போதைய பொருளாதாரம் தொடர்பில் அரசாங்கத்துக்கு உரிய விளக்கத்தை வழங்கவில்லை என்று அமைச்சரவையின் உறுப்பினர்கள் பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர் எனவே அவர் பதவி விலகவேண்டும் என்று பல அமைச்சர்கள் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து அமைச்சர் சமல் ராஜபக்சவின் வீட்டில் அண்மையில் கூடிய ராஜபக்சர்கள், தமது நிலைப்பாடுகளை வெளியிட்டுள்ளனர். இதன்போது பி.பீ ஜயசுந்தரவை ஜனாதிபதி செயலாளராக நியமித்தமைக்கு பிரதமரே காரணம் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எனினும் பி.பீ ஜயசுந்தர பதவி விலகவேண்டும் என்று சமல் ராஜபக்ச வலியுறுத்த விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத பசில் ராஜபக்ச,பி.பீ ஜயசுந்தர பதவி விலகினால் அவருக்கு நிதியமைச்சில் ஆலோசனையாளர் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு மாநகரில் 1355 டெங்கு நோயாளர்கள்.!

wpengine

அய்யூப் அஸ்மின் அமைச்சர் றிஷாட்டை விமர்சிப்பதன் மூலம் தமிழ் கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன?

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்:

wpengine