பிரதான செய்திகள்

பிள்ளையை தேடி அலைந்த தாய் மாரடைப்பால் மரணம்

காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளையை தேடி அலைந்த மற்றுமொரு தாயார் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச்சேர்ந்த வேலு சரஸ்வதி என்பவரே மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.

வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி,வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரும் போராளியாக ஒருவர் தடுப்பு முகாமிலிருந்து வந்தவர்,மற்றும் காணமலாக்கப்பட்ட தனது மகளைத்தேடியலைந்த அன்னை மனதாலும் உடலாளும் சோர்வடைந்த நிலையில் மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.

கடற்புலி போராளியான சுவித்தா எனும் அவரது மகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பல தாய்மார்கள் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை தேடியலைந்து உயிரிழிந்திருக்கிறார்கள் இந்நிலையில் இன்று சரஸ்வதியம்மாவும் தனது மகளை காணாமலே வலிகளோடு இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கிறார்.

Related posts

மன்னார், முருங்கன் பகுதிகளில் நாளை நீர்வெட்டு

wpengine

13 இலட்சத்துக்கும் அதிகமான தொகையினை கோட்டாவுக்கு செலவிடும் அரசாங்கம்!

Editor

ஞானசாரவுக்கு உதவுவது சம்பிக்கவே – திஸ்ஸ

wpengine