பிரதான செய்திகள்

பிலிமத்தலாவை பகுதியில் சிறு பதட்டம்! முகநூல் பதிவினால்

கண்டி பிலிமத்தலாவை , தந்துர பகுதியில் முஸ்லிம் இளைஞன் ஒருவன் முகநூலில் புத்தரை அவமதிக்கும் வகையில் பதிவிட்டதாக கூறப்படும் பதிவை தொடர்ந்து அங்கு நேற்று முதல் சிறு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.


நேற்றிரவு பெருமான்மையினத்தவர்கள் முச்சக்கரவண்டிகளில் அப்பகுதிக்கு வந்து சென்றிருந்த நிலையில் இன்று நோன்பு துறக்கும் நேரத்தில் முனவத்துகொட பள்ளிவாசல் அருகில் பல சிங்கள இளைஞர்கள் கூடியதால் மீண்டும் பதட்ட நிலை அதிகரித்துள்ளது.

இதன் போது ஆங்காங்கே கற்கள் வீசப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன அதேவேளை வீடுகள் சிலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் நாம் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் லாபிர் ஹாஜியார் மற்றும் ஹிதாயத் சத்தார் ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்ட போது இது விடயமாக கேட்டபோது.

தாங்கள் இருவரும் மத்திய மாகான பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும் அதனைத் தொடர்ந்து அங்கு பொலிசார் விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ஹலீம் அவர்கள் நேற்று முதல் நேரடி கவனம் செலுத்தி வருதாக அவர் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் பிரதேசத்தின் விகாரையில் இவ்விகாரத்தை சுமுகமாக முடித்துக் கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் அறியமுடிகிறது.

Related posts

விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த ஆக்கபூர்வமான செயற்பாடுகள் தேவை” – ரிஷாட் எம்.பி

wpengine

இலங்கை குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க பகிஸ்தான் அரசு நடவடிக்கை- அமைச்சர்

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தியது ரிஷாட் பதியுதீனும் ஹிஸ்புல்லாஹ்வுமே’ – விஜயதாஸ ராஜபக்ஷ!

wpengine