நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது.
இன்று பிற்பகல் 4 மணி வரை நிலைவரப்படி,
கொழும்பு மாவட்டத்தில் 50 சத வீத வாக்குப் பதிவுகளும்
பதுளை மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும்
பொலன்னறுவை மாவட்டத்தில் 53 சத வீத வாக்குப் பதிவுகளும்
நுவரெலியா மாவட்டத்தி 60 சத வீத வாக்குப் பதிவுகளும்
களுத்துறை மாவட்டத்தில் 61 சத வீத வாக்குப் பதிவுகளும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும்
மன்னார் மாவட்டத்தில் 70 சத வீத வாக்குப் பதிவுகளும்
அநுராதபுரம் மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும்
பொலன்னறுவை மாவட்டத்தில் 64 சத வீத வாக்குப் பதிவுகளும்
மொனராகலை மாவட்டத்தில் 61 சத வீத வாக்குப் பதிவுகளும்
கேகாலை மாவட்டத்தில் 58 சத வீத வாக்குப் பதிவுகளும்
காலி மாவட்டத்தில் 63 சத வீத வாக்குப் பதிவுகளும்
வவுனியா மாவட்டத்தில் 60 சத வீத வாக்குப் பதிவுகளும்
திகாமடுல்ல மாவட்டத்தில் 63 சத வீத வாக்குப் பதிவுகளும்
புத்தளம் மாவட்டத்தில் 55 சத வீத வாக்குப் பதிவுகளும்
திருகோணமலை மாவட்டத்தில் 67 சத வீத வாக்குப் பதிவுகளும்
இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகள் வாக்கெடுப்பு கட்டளைச்சட்டத்தின் படி 8287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 339 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான தேர்தல் வாக்கெடுப்பு இன்று 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
28 மாநகர சபைகளுக்கும் 36 நகர சபைகளுக்கும் 275 பிரதேச சபைகளுக்கும் 8287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றுள்ளது.
நாடளாவிய ரீதியில் 4877 உள்ளூராட்சி மன்ற அதிகார சபை வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ள 13, 759 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஊடாக இன்று வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
வாக்கெண்ணும் பணிகளுக்காக தொகுதி மட்டத்தில் 5,783 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டு சற்று நேரத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயோட்சைக் குழுக்கள் சார்பில் 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பின் கூட்டிணைக்கப்பட்ட பெயர் பட்டியலுக்கமைய இம்முறை 17,156,338 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.