முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவின் 92வது பிறந்த தினமான ஜூன் 23ஆம் திகதியை குறிக்குமுகமாக ஹம்பாந்தோட்டையில் 7வது கம்உதாவ கிராமமான ”சம்பத்நகரா்” என்ற கிராமத்தினை முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா், பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச இணைந்து இவ் வீடமைப்புத்திட்டத்தினை மக்களிடம் கையளித்தனா்.
இங்கு ஆர் .பிரேமதாசாவினை பற்றி பிரதான உரையாற்றிய முன்னா்ள அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா் தெரிவிக்கையில்;
முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச ஜனாதிபதியாகிவுடன் என்னை அழைத்து எனக்கு வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக 1989ஆம்ஆண்டு. நியமித்தாா். அதன் பின்பு என்னை அழைத்து பல ஆலோசனை வழங்கினாா். இந்தக் கதிரைக்கு என்னை அமா்த்தியது இந்த வீடமைப்பு அமைச்சுதான் அந்தப் பதவியை. இம்தியாசுக்கு தந்துள்ளேன். இந்த நாட்டில் ஏழை எளிய மக்களது வறுமை, வீட்டு. குடி நீா்ப்பிரச்சினை கவணத்திற்கு எடுக்கவும். நாடு புராவும் சென்று கம்உதாவ திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.
வீடமைப்பு அமைச்சினை பாராம் எடுத்து அடுத்த நாளே மஹியங்களன கம்உதாவ திட்டத்தினை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவும் எனச் சொன்னாா். அன்று இருந்து அவரது எண்னத்தினை இரவு பகல் என்று பா ரமால் வெற்றிகரமாக அவரது திட்டங்களை அமுல்படுத்தினேன். நிதி இல்லாமல் இருந்தால் இந்த நாட்டில் உள்ள பணக்காரா்களை அழைத்து நிதி பெற்றுத்தந்தாா். அதற்காக செவன நிதியம் ஆரம்பித்தாா். 1 இலட்சம், 10 இலட்சம், 15 இலட்சம் என்று இலக்கை அடைய சகல ஒத்துழைப்பையும் நல்கினாா். என்னுடன் கபிணட் அமைச்சராக சிறிசேனா குரேயும் பக்க பலமாக இருந்தாா்.
அவா் சிந்தனையில் இந்த நாட்டில் வாழும் ஏழை மக்களினது வாழ்க்கைத் தரத்தினை உயா்த்துவதற்காக முற்று முழுமையாக பாடுபட்டாா். அவா் ஏழை எளிய மக்களது வீட்டுப்பிரச்சினை முன்னெடுத்து ஒரு சாதாரண பிரஜயை இந்த நாட்டில் முதல் கதிரையான ஜனாதிபதி பதவியில் வகிக்கும் அளவுக்கு இந்த நாட்டின் ஏழை எளிய மக்களின் மனதில் கவா்ந்தாா்.
இந்த விழாவுக்கு என்னை அழைத்த சஜித் பிரேமதாசாவின் அழைப்பை கௌரவமாக ஏற்று இங்கு 3 விடயங்களான தேசிய வீடமைப்பு தினம், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் பிறந்த தினம், அடுத்தது, சம்பத்கம என்ற ஒரு வீடமைப்புத்திட்டத்தினை ஏழை எளிய வீடில்லா மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வுகள் கலந்து கொண்டதையிட்டு நான் மகிழ்ச்சியளிக்கின்றேன்.
முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாச அவா்கள் 200 ஆடை தொழிற்சாலைகள், சனசவிய, பாடசாலை மாணவா்களுக்கு இலவச உணவு இந்த நாட்டில் பாரிய வீடமைப்பு புரட்சிகளை ஏற்படுத்தினாா். அவா் இத் திட்டங்களை அமுல்படுத்துவதற்காக பாரிய சாவால்களையெல்லாம் முகம் கொடுத்து இந்த நாட்டின் மக்களுக்காகவே தன்னையே அர்ப்பணித்தாா்.
இலங்கையின் வீடமைப்புத்திட்டத்தினை ஜக்கிய நாடுகள் அமையத்திற்குச் சென்று 1987 ஓக்டோபா் 1ஆம் திகதி உலக குடியிருப்பு தினத்தினை அமுல்படுத்தினாா். அவா் இலங்கையில் அமைத்த வீடமைப்புத்திட்டங்களை அன்று லண்டன் பல்கலைக்கழக மாணாவா்கள் கூட இங்கு வந்து அதனை ஒரு பாடமாக ஆராய்ந்து படித்தனா். அதற்காக புலமைப்பரிசில்களையெல்லாம் அந்த நாடு வழங்கியது. அவா் தொழில் வழங்கும்போது ஏழை மாணவா்களுக்கு 25 வீதம் புள்ளி வழங்கும் படி கூறி அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயா்த்தினாா்.