Breaking
Thu. Nov 14th, 2024

 

குறிப்பாக ஆண்மை இழப்பிற்கும், பெண்கள் விரைவில் பூப்படைவதற்கும் நீங்கள் சாப்பிடும் பிராய்லர் கோழி மிக முக்கியமான காரணம் என்று அடித் துச்சொல்கிறது அந்த மெசேஜ்.

பிராய்லர் கோழிகள் கேன்சரை தோற்றுவிக்கிறது என்றும் அதிர்ச்சி தரு கிறது.கட்டாயம் படியுங்கள், பயனுள்ள பதிவு என்ற வேண்டுகோளோடு துவங்கும் அந்த மெசேஜில் “பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது.

கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது. கோழிகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காக அதிகளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

இதனால் கோழிகளுக்கு வரும் நோயை குணப்படுத்த முடியாமல் போவதோடு, அந்த இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சி.எஸ்.இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளு க்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப் படுகிறது.

பெண்குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்துவிடுகிறார்கள்.

பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது, நமது கல்லீரலில் வீக்கத்தையும் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. 100ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது.

பிராய்லர் கோழியை சாப்பிடுவதால் சிறுநீரகங்ளிலும் கல்லீரலிலும் கேன்சர் நோய் மற்றும் குடல் புற்று நோயும் உருவாகிறதாம். இது தவிர மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதி களின் எண்ணிக்கையை அடுக்கலாம்.” என்றெல்லாம் அலர்ட் செய்யும் அந்த மெசேஜில் இன்னொரு தலை சுற்றவைக்கும் தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது.

பிராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட காரணத் தால் நாமக்கல் பகுதி மக்களுக்கு புற்று நோய் பிரச்னை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் முதலாளி களான சில அரசியல்வாதிகள், உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்” என்று முடிகிறது அந்த செய்தி.

நாட்டுக்கோழியின் முட்டையில் மஞ்சள் கரு அதிக மாகவும் வெள்ளைக்கரு குறைவாகவும் இருக்கும், பிராய்லர் கோழிகளில் வெள்ளைக் கரு அதிகமாக இருக்கிறது. இப்போதைக்கு பிராய்லர் என்பது மக் களின் ஊட்டச்சத்து சார்ந்ததாக இல்லை.

வணிக நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது. பிராய்லர் கோழிகளால் இது மாதிரியான பிரச்னைகள் கட்டாயம் மனிதர்களுக்கு ஏற்படுகிறது” என்றவர் அதை எப்படி போக்குவது என்பதற்கான வழிவகைகளையும் அடுக்கினார்.
“இந்த நிலைமையை தவிர்க்க, கோழி வளர்ப்பை வெளிப்படையாக்க வேண்டும்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *