உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பிரபுடன் எனக்கொரு அழகான உறவு இருந்தது. அது மிக அழகான தருணம்.குஷ்பு

கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிரபுவும் குஷ்புவும் காதலிப்பதாகவும் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் சிவாஜி குடும்பத்தினர்களின் முயற்சியால் இந்த ஜோடி பிரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் குஷ்பு, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த குஷ்பு, பிரபுவுடனான உறவு குறித்து கூறியதாவது: ஆமாம், பிரபுடன் எனக்கொரு அழகான உறவு இருந்தது. அது மிக அழகான தருணம்.

அந்தத் தருணம் ஒரு சமயத்தில் முடிவுற்றது. அதற்குப் பிறகு சுந்தர் சி எனும் அழகான தருணம் என் வாழ்வில் மலர்ந்திருக்கிறது. இப்போது இது தான் நிஜம். குஷ்பூ, சுந்தர் சி உறவு தான் நிலையானது. இதை யாராலும் பிரிக்க முடியாது. பிரபுவுடனான நினைவுகளை இப்போது பகிர்ந்து பேரன், பேத்தி எடுத்து சந்தோஷமான மனநிலையிலிருக்கும் அவரை ஏன் சங்கடப் படுத்த வேண்டும்.

எனக்கும் 18 வயதில் மகளிருக்கிறார். எங்கள் வாழ்க்கையும் மிக அழகான தருணங்களால் நிறைந்திருக்கிறது. வாழ்வில் பல அழகான தருணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் பிரபுவுடனான நட்பும் அப்படியொரு தருணம் எனச் சொல்வேன்.

Related posts

அனர்த்த பொருட்களை திருடிய கிராம உத்தியோகத்தர் கைது!

wpengine

பள்ளிவாசலுக்கான இலத்திரனியல் உபகரணங்களை அமைச்சர் றிஷாட்

wpengine

அமெரிக்க இராஜாங்க செயலாளர் கட்டார் விஜயம்

wpengine