Breaking
Sun. Nov 24th, 2024

யுத்­தத்தின் இறுதி தரு­ணங்­களில் நடந்த உண்­மை­களை கண்­ட­றியும் நட­வ­டிக்­கையை அர­சாங்கம் மேற்­கொள்ளும். இந்த விவ­காரம் தொடர்பில் சரத் பொன்­சே­கா­விடம் இருந்தே உண்­மை­களை தெரிந்­து­கொள்ள முடியும். இறுதிக்கட்டத்தில் பிர­பா­கரன் உயி­ருடன் இருந்­தாரா?, போர் முறை­மைக்கு முர­ணான வகையில் அவர் கொல்­லப்­பட்­டாரா? என்­பது கண்­ட­றி­யப்­படும் என்றும் அர­சாங்கம் குறிப்­பிட்­டது.

இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்படும் போர்­க்குற்­றங்கள் தொடர்பில் சிக்­கல்கள் நில­வி­வரும் நிலையில் முன்னாள் இரா­ணுவத் தள­பதியும் அமைச்சருமான சரத் பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ள கருத்துக்கள் தொடர்பில் அர­சாங்கத்தின் நிலைப்­பாடு என்­ன­வென வின­வி­ய­போதே பாது­காப்பு இரா­ஜங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்.

யுத்தக் குற்­றச்­சாட்டு தொடர்பில் ஏற்­க­னவே

சர்­வ­தேச தரப்­பினர் அவ­தா­னித்து வரும் நிலையில் இப்­போது அமைச்சர் சரத்பொன்­சேகா கூறி­யுள்ள கருத்­துகள் மேலும் சர்ச்­சை­களை எழுப்­பி­யுள்­ளன.

எவ்­வாறு இருப்­பினும் அர­சாங்கம் இந்த விவ­கா­ரத்தில் ஆராய்ந்து சரி­யான வகையில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும். இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் தொடர்பிலும் வெள்­ளைக்­கொடி விவா­க­ரத்­திலும் சர்­வ­தேச கண்காணிப்பாளர்கள் மூல­மாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் என சரத் பொன்­சேகா கூறியுள்ளார்.

அவ்­வாறு ஒரு தேவை இப்­போது அர­சாங்­கத்­திற்கு இல்லை. இப்­போ­தி­ருக்கும் நிலையில் நாம் உள்­ளக விசா­ர­ணைகள் மூல­மாக இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடியும்.

அதேபோல் உள்­ளக பொறி­மு­றைகள் சரி­யாக நடை­பெறும். எவ்­வாறு இருப்­பினும் யுத்­தத்தின் இறுதித் தரு­ணங்கள் தொடர்பில் அர­சாங்கம் தீவி­ர­மான விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும். இதன் போதும் இரா­ணுவம் செய்­த­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றாலும் அதில் எந்த சந்­தர்ப்­பத்­திலும் இரா­ணு­வத்தை இலக்­கு­வைக்கும் நோக்கம் எமக்கு இல்லை.

இறுதி யுத்­தத்தில் பொது­மக்கள் பாதிக்­கப்­பட்­டனர். பொது­மக்கள் காணாமல் போன­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. அதேபோல் பொது­மக்கள் இரா­ணுவம் வசம் சர­ண­டைந்­த­தா­கவும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. இந்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் பல கோணங்­களில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. உண்­மை­களை கண்­ட­றியும் நட­வ­டிக்­கைகள் பல­மாக முன்­னெ­டுக்­கப்­படும். இப்­போது சரத் பொன்­சேகா பல இர­க­சிய தகல்­களை முன்­வைத்து வரும் நிலையில் அவ­ரிடம் இருந்து உண்­மை­களை அறியும் விசா­ர­ணையை ஆரம்­பித்தல் மிகவும் சாத­க­மாக இருக்கும். இறுதி யுத்தம் தொடர்பில் உண்­மையில் என்ன நடந்­தது என்­பதை அவர் நன்கு அறிந்­தவர்.

மேலும் பிர­பா­கரன் தொடர்பில் அவர் தெரி­வித்த கருத்துகளும் ஆராயப்பட வேண்டும். அவர் யுத்தம் முடிவடைந்த பின்னரும் உயிருடன் இருந்தாரா என்பதை ஆராய வேண்டும். போர் விதிமுறைகளுக்கு முரணாக அவர் கொல்லப்படிருந்தால் அவற்றையும் கருத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவைக்கைகளை கையாள வேண்டும் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *