Breaking
Fri. Nov 22nd, 2024

(மாத்தறையிலிருந்து ப.பன்னீர்செல்வம் , லியோ நிரோஷ தர்சன்)

பிரபாகரனுக்கு பணம்கொடுத்து உடன்படிக்கை செய்து கொண்டு தேர்தலில்  வெற்றிபெற்றவர்  தேசத் துரோகியா அல்லது தேர்தலில் தோல்வியுற்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த நான் தேசத்துரோகியா என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  கேள்வி எழுப்பனார்.  

கிராமத்தையும் நாட்டையும் எதிர்காலத்தையும் கட்டியெழுப்ப ஒன்றுபட்டு செயற்படுவோம். தேர்தலில் பிரிந்து நின்று போட்டியிடுவோம். உலகத்திற்கு புதிய அரசியல் கலாசாரத்தை உலகிற்கு வெளிப்படுத்துவோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மாத்தறை சனத ஜயசூரிய மைதானத்தில் நேற்று வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கத்தின் ஒருவருட பூரத்தி விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே    பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால ஆட்சியில் இலங்கையில் தேசிய கிரிக்கட் அணி அரசியல் மயமாக்கப்பட்டிருந்தது.  இன்று எமது கிரிக்கட் அணி தூய்மையாக்கபட்டு வெற்றிபெரும் அணியாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த கால ஆட்சி என்ற கிரிக்கட் அணியும் அரசியல் மயமாக்கப்பட்டிருந்நது. அதனை தோல்வியடையச் செய்து தூய்மையான ஆட்சி வெற்றிபெற்றது.

இன்று எமது அணியில் இளம் வீரர்கள் பலர் களமிறங்கியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என இளம் வீரர்களை களமிறக்கியுள்ளதுடன் அரசாங்கம் வெற்றிபெரும் அணியாக மாறியுள்ளது.

கடந்த காலத்தில் அம்பாந்தோட்டையில் கப்பல்கள் வராத நீச்சல் குளம் அமைக்கபட்டது.  நாம் அதனை விரைவில் கப்பல் வரும் துறைமுகமாக அபிவிருத்தி செய்வோம்.  அதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று மத்தளவில் மயில்கள் வாழும் விமான நிலையம் அமைக்கப்பட்டது.  அதனையும் விமானங்கள் தரையிறங்கும் விமான நிலையமாக மாற்றும் திட்டங்களையும் உருவாக்கியுள்ளோம். வடமேல் மாகாணம், கொழும்பு, கண்டி, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் கிழக்கு மாகாணம் ஆகிய நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அபிவிருத்திகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படும். அதற்கான அத்திவாரத்தை நாங்கள் இந்த அரங்கில் போட்டுவிட்டோம்.

கடந்த ஆடசியாளர்கள் நாட்டை கடனில் தள்ளிவிட்டு பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி சர்வதேச ரீதியில் இலங்கையை தனிமையாக்கிவிட்டு இருண்ட தேசத்தை எம்மிடத்தில் கையளித்தனர்.  அதனை இன்று படிப்படியாக முன்னேற்றி வருகின்றோம். உலகிற்கு அச்சமின்றி வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளோம். அன்று எமது படையினரை விசாரிப்போம் என்று தருஸமானுக்கு உறுதியளித்தவர்கள் சரத் பொன்சேகாவை சிறையில் தள்ளினார்கள்.

தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பிரபாகரனுக்கு பணம்கொடுத்து உடன்படிக்கை செய்தவர்கள் இன்று தம்மை தேசப்பற்றுள்ளவர்களாக காட்டிக்கொள்கிறார்கள்.  ஆனால் நான் பிரபாகரனுக்கு பணம் வழங்கவும் இ்லலை உடன்படிக்கை செய்யவும் இல்லை.  எதிர்கட்சியிலேயே அமர்ந்திருந்தேன். அன்று என்னை தேசத்துரோகி என்கிறார்கள். உண்மையில் பிரபாரகனுக்கு பணம் கொடுத்து நாடடை காட்டிக்கொடுத்தவர் தேசத்திரோகியா இல்லாவிடின் எதிர்கட்சியில் அமர்ந்திருந்த நான் தேசத்துரோகியா   என்று கேட்கின்றேன்.

ஆசியாவில் எந்தவொரு நாட்டிலும் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அரசாங்கம் அமைத்ததில்லை. ஆனால் இலங்கையில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்கியுள்ளோம். 

எனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது. தேசிய அரசின் சில தீர்மானங்களை விமர்சிக்கலாம்,   திருத்தங்களை முன்வைக்கலாம். ஆனால் தேசிய அரசாங்கத்தை எதிர்ப்பது எவ்விதத்தில் நியாயமாகும். நாட்டில் பத்து இலட்சம் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம், பொருளாதாரத்தை முன்னேற்றுவோம், கல்வித்துறையை முன்னேற்றுவோம். கிராமத்தையும் நாட்டையும் எதிர்காலத்தையும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம். தேர்தலில் பிரிந்து நின்று போட்டியிடுவோம். உலகத்திற்கு புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவோம் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *