பிரதான செய்திகள்

பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான தினேஷ் முத்துகல காயமடைந்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியரான தினேஷ் முத்துகல காயமடைந்துள்ளார்.

அவர் பயணித்த வாகனம் எரிபொருள் பௌசருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (21) அதிகாலை 2.30 மணியளவில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நாகலகமுவ மற்றும் தம்பொக்கவிற்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த தினேஷ் முத்துகல மற்றும் மூவர் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்

Related posts

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழையுடனான காலநிலை!

Editor

வேறு கட்சிகளில் உள்ள நல்லவர்களையும் இணைத்து, மாபெரும் NPP கூட்டணயை உருவாக்கி வருகின்றோம். – தேவானந்த சுரவீர.

Maash

பாராளுமன்ற தேர்தலின் பின்பு! வேலைவாய்ப்பு

wpengine