பிரதான செய்திகள்

பிரதேச பொதுமக்களின் சம்மதத்துடன் தோனாவினுடைய சரியான அளவினை அடையாளப்படுத்தும் நடவடிக்கை

(எம்.ரீ. ஹைதர் அலி)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கை்கமைவாக மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் காத்தான்குடி சின்னத்தோணாவினுடைய புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இத்தோணாவை ஊடறுத்து செல்லும் பகுதிகளில் பொதுமக்களின் காணிகளும் உள்ளடங்கியுள்ளது. தோனாவினுடைய சரியான அளவினை நியாயமான முறையில் பிரதேச பொதுமக்களின் சம்மதத்துடன் அடையாளப்படுத்தும் நடவடிக்கை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் தலைமையில் 2016.08.25ஆந்திகதி (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி பிரதேச செயலாளர் முஸம்மில், காத்தான்குடி நகரசபையின் செயலாளர் ஸபி மற்றும் நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் தோணா புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் கொந்துராத்து வேலையாட்கள் அனைவரும் குறித்த தோணா ஊடறுத்து செல்லும் பொதுமக்களின் காணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டனர். இதன் பொது குறித்த காணி உரிமையாளர்களான பொதுமக்களை சந்தித்து நிலைமைகளை தெளிவுபடுத்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புடன் தோணாவினுடைய அளவீடுகளை மேற்கொண்டனர்.
தோணாவினுடைய அபிவிருத்தி பணிகளுக்காக உடைக்கப்படும் பிரதேச பொதுமக்களினுடைய சுவர்களை முடிந்த வரை தோணாவின் கொந்துராத்து நிதியிலிருந்து கட்டிகொடுப்பதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் சின்னத்தோணாவினுடைய கொந்துராத்து நபருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.unnamed
இதற்கமைய காத்தான்குடி சின்னத் தோணாவின் புனரமைப்பு வேலைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு மிகவிரைவில் பூரணப்படுத்தப்பட்டு, மழைக் காலங்களில் வெள்ள நீரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த பிரதேச மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைகப்பெறவுள்ளது.unnamed (1)

Related posts

“எழுக தமிழ்” – வெற்றிப்பேரணி வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்

wpengine

இன்று ஐ.தே.க.வுடன் சரத் பொன்சேகா

wpengine

மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் இனவாத கருத்துகளை பேச வேண்டாம்! மக்கள் பிரதிநிகள் கண்டனம்

wpengine