பிரதான செய்திகள்

பிரதேச சபை தவிசாளருக்கு 25ஆயிரம் ரூபா,உறுப்பினருக்கு 15ஆயிரம்

உள்ளூராட்சி சபைக்கு தெரிவான உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 135 மில்லியன் ரூபாய் பொது நிதி செலவிடப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட 8,691 உறுப்பினர்களுக்கே இந்த நிதி செலவிடப்படுகிறது.

உள்ளூராட்சி மன்ற சுற்றுநிரூபப்படி மாநகர மேயர் ஒருவருக்கு மாதாந்தம் 30ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. உதவி மேயருக்கு 25ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது
நகரசபை தவிசாளருக்கு 25ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது, நகரசபையின் உதவி தவிசாளருக்கு 20ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது.

பிரதேசசபை தவிசாளருக்கு 25ஆயிரம் ரூபாவும், உதவி தவிசாளருக்கு 20ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகிறது.

பிரதேசசபைகளின் உறுப்பினர்களுக்கு 15ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது.

இதனை தவிர அடிப்படை கொடுப்பனவுகள், போக்குவரத்து, முத்திரைக் கொடுப்பனவுகள் மற்றும் அமர்வு ஒன்றுக்கு வருகைத்தந்தால் 1500ரூபா என்ற அடிப்படையில் மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் 35ஆயிரம் ரூபாவை மாதம் ஒன்றுக்கு பெறுகிறார்.

Related posts

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு அமைச்சர் றிசாத் விஜயம் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

wpengine

மரிச்சிகட்டி பகுதியில் வாகன விபத்து (படம்)

wpengine

நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார்-ரவூப் ஹக்கீம்

wpengine