பிரதான செய்திகள்

பிரதேச சபை உறுப்பினர் பேஸ்புக்கின் ஊடாக பாலியல் இலஞ்சம்

நிகவரெடிய பிரதேசத்தில் விசேட தேவையுடைய இராணுவ வீரரொருவரை அப்பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரொருவர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக பேஸ்புக்கில் மேற்கொள்ளப்பட்டிருந்த பதிவொன்று தொடர்பில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான இராணுவ வீரரின் மனைவி குருணாகலை போதனா மருத்துவமனையில் கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில் அவர் நிகவரெடிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் , அவரை மீண்டும் குருணாகலை மருத்துவமனைக்கு இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனை தடுப்பதற்காக இராணுவ வீரரின் மனைவி குறித்த பிரதேச சபை உறுப்பினரை சந்திக்க சென்றுள்ளார்.

இதன்போது , குறித்த பிரதேச சபை உறுப்பினர் , அதற்காக பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து குறித்த இராணுவ வீரரும் , அவரது மனைவியும் இணைந்து பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதில் , நிகவரெடிய மருத்துவமனையில் இடம்பெற்றதாக கூறப்படும் 4 கோடி ரூபாய் மோசடி தொடர்பில் குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு தொடர்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் நிகவரெடிய காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய இரு தரப்பினரும் காவல் நிலையம் அழைக்கப்பட்டிருந்தனர்.

விசாரணைகள் நிறைவடைந்து அங்கிருந்து வௌியேறும் போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் மோதல் நிலை உருவாகியுள்ளது.

இதன்போது , பிரதேச சபை உறுப்பினரும் அவரின் மகனும் இணைந்து தனது கணவரான இராணுவ வீரரை தாக்கியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

மேலும் , இதுவரை குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக காவற்துறையினர் எந்த வித சட்ட நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என இராணுவ வீரரின் மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் எமது செய்திச் சேவை நிகவரெடிய காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு வினவியதில் , சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

Related posts

பேஸ்புக்கில் கூடவா பெண்களுக்கு இவ்வளவு பிரச்சினை உஷார்!

wpengine

அமைச்சர் டக்ளஸ்சின் கவனத்திற்கு மன்னார்-கொக்குபடையான் மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

இஸ்ரேலின் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Maash