பிரதான செய்திகள்

பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு துஆ பிராத்தினை

திடீர் சுகயீனமுற்ற நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தேக ஆரோக்கியத்துக்காக பல பள்ளிவாசல்களில் விசேட துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பள்ளிவாசல், சிகரம் ஜும்ஆ பள்ளி, காத்தான்குடி பதுறியா ஜும்ஆ பள்ளி, ஏறாவூர் ஷாபி பள்ளிவாசல், பாலமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல்,புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாசல், காங்கேயனோடை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் என பல்வேறு இடங்களில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆரோக்கியத்துக்காக விசேட  துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாசல் நிர்வாகம் என்பன இணைந்து மெத்தைப் பள்ளிவாசலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடாத்திய விசேட துஆ பிரார்த்தனையில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
அதேபோன்று, சிகரம் ஜும்ஆ பள்ளிவாசல் , ஏறாவூர் ரஹ்மத் நகர் ஷாபி பள்ளிவாசல், பாலமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல், புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாசல், பதுறிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றிலும் நடைபெற்ற விசேட துஆ பிரார்த்தனைகளில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன், காங்கேயனோடை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் காங்கேயனோடை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற விசேட துஆ பிரார்த்தனையிலும் அதிகளவானவர்கள் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Related posts

டிசம்பருக்கு முன்னர் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்

wpengine

காத்தான்குடி தபால் நிலையத்தை தரமுயர்த்த இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

wpengine

பசிலுக்கு கொரோனா தொற்றாம்! வைத்தியசாலையில் அனுமதி

wpengine