பிரதான செய்திகள்

பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதியை ஏற்பதில்லை! சாய்ந்தமருதில் தீர்மானம்

 

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சிசபையை வழங்குவதற்கு தடையாக சில அரசியல் வாதிகள் இருப்பதாகவும் மக்கள் நலன் சார்ந்த குறித்த கோரிக்கைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸும் ஒருவர் என்று கூறி, ஆவர் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு ஒதுக்கீடு செய்திருந்த 1500000.00 ரூபாய்களையும் உள்ளுராட்சிசபை கிடைக்கும் வரைக்கும் ஏற்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.

2017-11-03 ஆம் திகதி ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனை ஒன்று பள்ளிவாசலின் முற்றலில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பெரும்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளுராட்சிசபை விடயத்தில் அமைச்சர்களான ஹக்கீம்,றிஷாட் மற்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் போன்றோரால் சாய்ந்தமருது மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளதாகவும் இந்த மக்களின் நியாயமான கோரிக்கையை சிலர் வேறுகண்கொண்டு பார்ப்பதாகவும் சாய்ந்தமருது மற்றும் கல்முனை மக்கள் உறவுகளால் ஒன்றினைந்தவர்கள் என்றும் இந்த உறவுகளை யாரும் பிரித்து விட முடியாது என்றும், சாய்ந்தமருது மக்கள் நிருவாக பிரிப்பு ஒன்றை நட்டுமே கோருவதாகவும் அதனூடாக கல்முனை, மாற்றுச் சமூகத்தின் கைக்கு சென்றுவிடும் என்று போலியான பிரச்சாரம் செய்வதாகவும் இவ்வாறானதொரு நிலை இல்லை என்றும் தெரிவித்தார்.

மக்கள் பணிமனை 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்றும் இதற்கு காத்திராமான ஆலோசனைகளை எவரும் தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

Related posts

சட்டமா அதிபரின் ஆட்சேபனை உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

Editor

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும்-சிறீதரன்

wpengine

பேரீச்சம் பழ வரி அதிகரிப்பு நல்லாட்சி அரசின் நோன்பு கால சலுகையா?

wpengine