பிரதான செய்திகள்

பிரதி அமைச்சர் அமீர் அலியின் முயற்சியில் களுதாவளையில் பொருளாதார நிலையம்

(அனா)
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளையில் பொருளாதார மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (22.07.2017) இடம்பெற்றது.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹரிசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், அதன் உறுப்பினர்களான கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெட்ணம், எம்.எஸ்.சுபைர், அமைச்சின் செயலாளர் ரேனுஹா எகநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாசியுடன் முப்பது மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதுடன், ஐம்பது கடைத் தொகுதிகள் நவம்பர் மாத இறுதியில் முடிவடையும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

Related posts

அமீர் அலி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பு

wpengine

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்தியது மயில் கட்சி யானையில்

wpengine

3 ஆயிரத்து 626 பேருக்கு ஆசிரியர் நியமனம்

wpengine