பிரதான செய்திகள்

பிரதி அமைச்சர் அமீர் அலியின் முயற்சியினால் ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு பற்சிக்சை நிலையத்திற்கான உபகரணங்கள்

(அனா)
ஓட்டமாவடி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவை கொண்டாட இருப்பதனால் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் மூலம் பயன் பெற்ற அனைவரும் தங்களது பங்களிப்புகளை வழங்க வேண்டும் அப்போதுதான் விழாவை சிறப்பாக நடாத்துவதுடன் அவ் விழாவினை தேசிய மட்டத்தில் பேசக் கூடிய விழாவாக நடாத்த முடியும் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்;.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்;.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியால் கல்வி இராஜங்க அமைச்சரினால் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பற்சிக்சை நிலையத்திற்கான உபகரணங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எச்.ஹலீம் இஸ்காக் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்ற போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படப் போகின்றது என்று நாடலாவிய ரீதியில் ஊடகங்கள் மூலம் பேசப்பட்டு வருகின்ற இச் சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் ஒன்றினைந்து விழா ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் தனிப்ட்ட பிரச்சினைகளை விழாவில் சேர்த்துக் கொள்ளாமல் பாடசாலையின் நலனுக்காக அனைவரும் உழைக்க வேண்டும்.

பற்சிகிச்சை உபகரணங்களை பெற்று தருவதற்கு உதவிய கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஷ்ரப்இ கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக செயலாளர் எம்.எம். நௌபல்இ பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் எச்.எம்.எம். றுவைத்,

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ. அஸ்மிஇ மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி. ஜிப்ரி கரீம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

மீள்குடியேற்றத்தை தடுப்பவர்கள் இனவாதிகளாகவும், பிரச்சினைக்குரியவர்களாகவும் காட்டுகின்றார்கள் அமைச்சர் றிஷாட்

wpengine

வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.

wpengine

புரையோடிப் போயில்ல மத சார்பான மக்களை மூளைச் சலவை செய்வது மிகக் கடினமே NDPHR

wpengine