Breaking
Sun. Nov 24th, 2024
(கிழக்கான் அஹமட் மன்சில்)

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்கள் சமூகம் சார் சிந்தனையோடும்,முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்பை கருத்தில் கொண்டும் இன்றைய காலகட்டத்தை கவனத்தில் கொண்டும் கிழக்கில் இருக்கும் புத்திஜீவிகள் அனைவரும் “வரலாற்றுத் தேவைக்காக ஒன்று படுவோம்”என்ற தொனிப் பொருளில் அண்மையில் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா விடுத்திருந்திருந்த அழைப்புக்கு எதிராக விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் ஹரீஸ்  அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவரினால் விடப்பட்டிருக்கும் அறிக்கையில் அதாவுல்லாவிடம் சில கேள்விகளையும், அவருக்கான கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.பிரதியமைச்சர் ஹரீஸ் மல்லாக்காக படுத்து துப்புவதை போல் அமைந்திருக்கிறது அவரின் அறிக்கை.அதாஉல்லாவை நோக்கி விரல் நீட்டி இருக்கும் பிரதியமைச்சர் தன்னிலை மறந்து விட்டார்.அவர் விட்டிருக்கும் அறிக்கையை கண்ணாடி முன் நின்று அவரை பார்த்து வாசித்துக் கொள்வது சாலச் சிறந்தது.

பிரதியமைச்சர் ஹரீஸ் கூறி இருக்கும் கருத்தானது சிறுபிள்ளை தனமானதாக இருக்கிறது.மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் சமூகத்தைப்பற்றி சிந்திக்க கூடாது

எனக் கூறும் பிரதியமைச்சரின் கருத்தானது நியாயமற்றதாகும்.அக்கருத்தின் பிரகாரம் பிரதியமைச்சரும் சமூகத்தை பற்றி சிந்திக்க கூடாது காரணம் 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில்  மக்களால் நிராகரிக்கப்பட்டவரே.

அதாவுல்லா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்த பின்னர் குறிப்பிட்ட சில வருடங்கள் அவரது கொள்கையை ஏற்று அவரின் நிழல்தேடி சென்று பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வரலாற்றை மறந்துவிட்டீரா?பிரதி அமைச்சருக்கு நிழல் தந்து அரவணைத்த போது அதாவுல்லா துரோகியாக தென்படவில்லையா?

அதாஉல்லா தனித்து நின்று தேர்தல்களில் வெற்றியிட்டு காட்டி வரலாற்று நாயகனாக வலம் வருகிறார்.முக்கியமான அமைச்சுப்பதவிகளை வகித்த பெருமைக்குமுரியவர்.பொத்துவில் தொகுதியில் தனித்து நின்று அதாஉல்லா வெற்றியீட்டியதை போன்று மு.கா விலிருந்து வெளியேறி கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்ல முடியுமா?சரி பாராளுமன்றம் இல்லாவிட்டாலும் கல்முனை மாநகரசபை உறுப்பினராக ஆவது வரமுடியுமா?

அதாஉல்லாவின் முயற்சியினால் செய்யப்பட்ட அபிவிருத்திகளிலும் அவர் அமைச்சராக இருக்கும் போது கட்டிய கட்டிடங்களுக்கும் மறைந்த அரசியல் தலைவர் அஷ்ரஃப்பின் பெயரை சூட்டியுள்ளாரா என கேள்வி கேட்க துணிந்த உங்களால்  நீங்கள் கட்டிய எத்தனை கட்டிடத்துக்கு தலைவரின் பெயரை சூட்டியுள்ளீர்கள் எனக்கூறமுடியுமா?வாய்களினால் பலாப்பழம் அறுப்பதில் நீங்கள் வின்னர் என்று மக்களுக்கு நன்கு தெரியும்.

கரையோர மாவட்டம் என்ற சொல்லை உச்சரிப்பதற்கு மு.கா தலைவருக்கும் உங்களுக்கும் எந்த தகுதியும் இல்லை என்பதை ஒரு முறை ஞாபகப்படுத்துகிறேன்.அதாஉல்லா அரசியலில் இருக்கும் போது கரையோர மாவட்டம் பெற்றுத் தந்தாரா?என நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டுமாக இருந்தால் அது நீங்கள் கரையோர மாவட்டத்தை பெற்றுக் கொடுத்த பின்னராக இருக்க வேண்டும்.ரெட் படத்தில் அத்திப்பட்டி அழிந்ததை போன்று அஷ்ரப்பின் கனவுகளில் உள்ள கரையோர மாவட்டத்தை குழிதோன்டி புதைத்து விட்டு அதாஉல்லாவை நோக்கி கேட்பதற்கு உங்களுக்கு நா கூசவில்லையா?

ஆட்சி அதிகாரங்களோடு நல்லாட்சி அரசில் பங்காளர்களாக இருக்கும் உங்களால் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைகளுக்கு எதிராக நீங்கள் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை என்ன என்பதை கூறமுடியுமா?பேரினவாதிகளால் அழிந்து போன அலுத்கமை சூத்திரதாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிட்டீர்களா?

முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால சந்ததியின் நிம்மதி பெருமூச்சிற்கு வழிவகுத்து கொடுக்க வேண்டும்.அரசியல் காழ்ப்புணர்ச்சிகளினால் இளம் தலைமுறை அழிவதற்கு துணை போகாமல் அரசியல் சகுனியாக இருந்து விடாமல் செய்பவனையாவது விட்டு விடுங்கள்.சமூகத்தை பற்றி சிந்திப்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் கடமை என்பதை சொல்லித்தான் புரியவைக்க வேண்டியதில்லை.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *