Breaking
Sun. Nov 24th, 2024

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கல்முனை மாநகர சபையின் நிதி மற்றும் நிலையியல் குழுவுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் கல்முனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் (கூட்டு) மூன்று கோரிக்கைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பிடம் முன்வைத்திருந்தனர்.

1.கல்முனையில் செயற்படும் தமிழ்ப் பிதேச செயலகத்தை தரம் உயர்த்தும் தங்களது முயற்சிகளுக்கு தடங்கலாக இருக்கக் கூடாது.

2. சாய்ந்தமருது தனியாகப் பிரிய வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம். ஆனால் ஏனைய பகுதிகள் பிரிக்கப்படக் கூடா. அவ்வாறு நீங்கள் பிரிக்க வேண்டுமாயின் தமிழ்ப் பிரதேசங்களை உள்ளடக்கியதாக ஒரு உள்ளூராட்சி மன்றத்தைத் தர வேண்டும்.

3. கல்முனை பிரதேசத்திலுள்ள தமிழர்களின் பூர்வீகக் காணிகளை கல்முனையின் பாரிய நகர அபிவிருத்தித் திட்டங்களுக்கோ ஏனைய தேவைகளுக்கோ சுவீகரிக்கக் கூடாது.

இந்த மூன்று கோரிக்கைகளையே கல்முனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கூட்டு) முன்வைத்துள்ளது.

இவற்றை நிறைவேற்றினால் மட்டுமே கல்முனை மாநகர சபையின் நிதி, நிலையியல் குழுக்களில் தாங்கள் பங்கேற்க முடியுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கும் முக்கியஸ்தர்களுக்கும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மூன்று விடயங்களுக்கும் பிரதியமைச்சர் எம்.எச்.எம் ஹரீஸ் இணக்கம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பில் பிரதியமைச்சர் ஹாரிஸ் அவர்களை நான் தொடர்பு கொண்டு இன்று (19) கேட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கைகளை வேறு இரண்டு முஸ்லிம் தரப்புகள் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தமக்குத் தெரிய வந்துள்ளதாக மிகச் சாதுரியமாக எனக்குப் பதிலளித்தார் .

இதன் மூலம் அவர்கள் அனைவரும் இணைந்து கல்முனை மாநகர சபையின் நிர்வாகத்தையும் செயற்பாடுகளையும் முடக்கவும் குழப்பவும் முயற்சிக்கலாம். ஆனால், இவ்வாறு நடைபெற்றால் அது கல்முனையின் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் வேறு வழிகளில் எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பதனை நினைத்து தான் அச்சமும் மன வேதனையும் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *