பிரதான செய்திகள்

பிரதி,இராஜாங்க அமைச்சர்கள் விபரம் இதோ

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது அமைச்சரவை நேற்று மாற்றப்பட்டது. இதில் 18 பேருக்கு புதிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் இன்று புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ளனர்.

புதிய பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் விபரங்கள் இதோ..

இராஜாங்க அமைச்சர்கள்..

பாலித ரங்கே பண்டார – நீர்ப்பாசன மற்றும் நீர்வழங்கல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்
திலீப் வெதரச்சி – மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமப்புற பொருளாதாரம்

இராஜாங்க அமைச்சர்

M.L.A.M. ஹிஸ்புல்லா – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

மொஹான்லால் கிரேரோ – உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

சம்பிக பிரேமதாச – தோட்டத் தொழில்கள் இராஜாங்க அமைச்சர்

லக்ஷ்மன் செனவிரட்ன – பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம், மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர்

ஸ்ரீயானி விஜயவிக்கிரம – மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி, விளையாட்டு இராஜாங்க அமைச்சர்

வீரகுமார திஸாநாயக்க – மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்..

அமீர் அலி – மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமப்புற பொருளாதாரம் பிரதி அமைச்சர்

டுனோஸ் குணகன்ட – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்

ரஞ்சன் ராமநாயக்க – சமூக மேம்பாட்டு பிரதி அமைச்சர்

கருணாரட்ன பரணவிதான – அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி, மற்றும் மலை நாடு பாரம்பரியம் பிரதி அமைச்சர்

சரதி துஷ்மந்த – நீதி மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் பிரதி அமைச்சர்

பாலிததெவரபெரும – வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சர்

மனுச நாணயக்கார – தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்

முத்து சிவலிங்கம் – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வயம்ப அபிவிருத்தி பிரதி அமைச்சர்

செய்ட் அலி சாஹிர் மௌலானா – தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் பிரதி அமைச்சர்

H. M. M. ஹரீஸ் – பொது நிர்வாகம் மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சர்

Related posts

சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம் றிஷாட்

wpengine

தொண்டர் ஆசிரியர் முறைகேடு! ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine

உழல் பட்டியலில் இலங்கை 91வது இடம்

wpengine