பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பிரதமர் ரணிலுக்கு விளையாட்டு காட்டிய மன்னார் மின்சார சபை

இன்று காலை 9மணிக்கு மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பெற்றுள்ள புதிய மாவட்ட கட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று மன்னார் மாவட்ட வளாகத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஷேட அதிதிகளாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜிர அபேரத்ன,கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மட்டும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர்கள் ஆன அனைவரும் வருகை கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற வேலை தொடராக சுமார் நான்கு தடவைகள் சுமார் 5 நிமிடம் வரை விட்டு விட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பாராளுமன்ற குழுக்களின் தலைவர் அடைக்கலம் நாதன் பேசுகின்ற போதும் அது போல அமைச்சர் றிஷாட் பதியுதீன், சுவாமி நாதன், காதர் மஸ்தான்,சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்றோர்கள் பேசுகின்ற போது மின்சாரம் விட்டு விட்டு வந்ததை கண்டு ஏற்பாட்டு குழுவினர் விசனம் அடைந்தனர் என அறிய முடிகின்றது.

தற்போது வெயில் காலம் என்பதனால் கூட்டத்திற்கு வருகை தந்த அதிகாரிகள்,பிரதம அதிதிகள் பல நிமிடங்கள் சிறமத்திற்கு ஆளாக வேண்டு உள்ளதாகம் தெரிவிக்கப்பட்டனர்.

இந்த நாட்டின் பிரதமர் வருகை தருகின்ற நிகழ்வுகளில் கூட மன்னார் மின்சார சபை சிராக மின்சாரத்தை கூட வழங்க முடியாத நிலையில் மன்னார் சபை காணப்படுவதாக பல அதிகாரிகள் விசனம் தெரிவித்தார்கள். 

Related posts

முன்னால் பிரதி அமைச்சர் அமீர்க்கு ஆதரவு வழங்கிய விளையாட்டு கழகம்

wpengine

பொலிஸ் உத்தியோகத்தர் விண்ணப்பம் கோரல்

wpengine

Chinese coronavirus patient at IDH recovered completely – Dr. Jasinghe

wpengine