பிரதான செய்திகள்

பிரதமர் ரணிலுக்கு எதிராக சிங்கள மக்கள் ஆர்பாட்டம்

சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள மக்கள், கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியை மறித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பகுதிக்கு நேற்று விஜயம் செய்த பிரதமர், கொஸ்வத்தை வைத்தியசாலை சலாவ இராணுவ முகாம், அதற்கு அருகிலுள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களை பார்வையிட்ட பின்னர் அங்கிருந்து சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட தமது கட்டங்களை பார்வையிட பிரதமர் வராமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே சிலர் வீதியை மறித்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பல மணித்தியாலங்களுக்கு இறுக்கமான வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை கடந்த 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் விபத்துக் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.ra.jpg2_

Related posts

மன்னார், சிலாவத்துறை, சவுத்பார் பகுதியில் கைதான மீனவர்கள்

wpengine

கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

“அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம்”

wpengine