பிரதான செய்திகள்

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச அழைத்துள்ள பேச்சுவார்த்தையில் தாம் உட்பட தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


பிரதமர் ஏற்பாடு செய்துள்ள பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்வது தொடர்பாக வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி என்ற வகையில் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் எனவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வைத்திய பரிசோதனை! இரு வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும்

wpengine

மீண்டும் மின் தடைக்கான சாத்தியம் உள்ளது : இலங்கை மின்சார சபை

wpengine

பேஸ்புக் வியாபரம் மன்னிப்பு கோரிய நிறுவனம்

wpengine