பிரதான செய்திகள்

“பிரதமரை சந்திக்கின்றோம்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்க வேண்டும் என்ற சுற்றுநிருபம் வெளிவந்திருக்கும் நிலையில், முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரச உயர்மட்டத்தை வலியுறுத்தும் வகையில், இன்று காலை (02) முன்னாள் அமைச்சர் பௌசியின் இல்லத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நாம் கூடி ஆராய்ந்தோம். பின்னர், பிரதமரிடம் உரிய பேச்சு நடத்துவதற்காக தற்போது செல்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு உயிரிழந்த மருதானையைச் சேர்ந்த பீ.எச்.எம்.ஜனூஸ் அவர்களின் ஜனாஸாவை அடக்கம் செய்வது தொடர்பில், நேற்று இரவு முழுவதும் உயரதிகாரிகள் மற்றும் அரச உயர்மட்டத்துடன் பல தடவைகள் பேச்சு நடாத்தி, தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதும், சாதகமான முடிவு எட்டப்படாத நிலையிலேயே, தற்போது பிரதமரை நேரில் சந்திக்கின்றோம்.

இன்று காலை முன்னாள் அமைச்சர் பௌசியின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில், முன்னாள் எம்.பிக்களான ரவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான், அலிசாஹிர் மௌலான, ஹரீஸ், பைசர் முஸ்தபா உட்பட நானும் கலந்துகொண்டோம்.

எங்களது முயற்சி வெற்றியடைவதற்காக அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்….

Related posts

நல்லாட்சியில்! ஞானசாரவுக்கு எதிரான வழக்கு வாபல்

wpengine

போலி பேஸ்புக் முகநூல் 2500 முறைப்பாடுகள்

wpengine

சுயதொழில் உபகரணங்களை வழங்கி வைத்த பிரதி அமைச்சர் அமீர் அலி

wpengine