பிரதான செய்திகள்

பிரதமருக்கு 5000 ரூபா உதவி செய்த 86 வயதான முதியோர்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு, ஐயாயிரம் ரூபா பணத்தை 86 வயதான முதியவர் ஒருவர் அனுப்பி வைத்துள்ளார்.


பொலனறுவை மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதான ஹேவாஹெட்ட என் முதியவர், கொரோனா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதியை இவ்வாறு மீள அளித்துள்ளார்.


பிரதமரின் கைகளுக்கு இந்த கடிதத்தை சேர்ப்பிக்குமாறு குறித்த முதியவர் கடிதத் தலைப்பில் எழுதியிருந்தார்.
இதன் அடிப்படையில் குறித்த கடிதம் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது.தமக்கு 86 வயது எனவும் நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும் நடக்க முடியாது எனவும் குறித்த முதியவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் நிவாரணமாக இவ்வாறு பணம் வழங்குவது மிகவும் பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும், கொவிட்-19 நோய் தொற்று நிவாரண நிதியத்திற்கு இந்த ஐயாயிரம் ரூபாவினை வழங்குமாறு அவர் மேலும் பிரதமரிடம் கோரியுள்ளார்.


இதன்படி, இந்த நிதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஒப்படைப்பதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார்.


எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதியின் பிறந்த நாள் அன்று இந்த பணம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Related posts

மொதிரிகிரிய நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

wpengine

தமிழ் கட்சிகள் மஹிந்த பெற்று கொடுத்த சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை என்கிறார் காமினி லொக்குகே! 

Editor

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்திய அமைச்சர் விமல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

wpengine