பிரதான செய்திகள்

பிரதமருக்கு, 13 வயது சிறுவன் அம்மார் ரிஷாதின் உருக்கமான வேண்டுகோள்

எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு , இலங்கை நாட்டை நேசிக்கும் 13 வயதைதேயான அம்மார் ரிஷாட் தனது உருக்கமான வேண்டுகோளொன்றை வீடியோ வடிவில் அனுப்பியுள்ளார். 


குறித்த வேண்டுகோளில் “கொவிட்19 இனால் மரணிக்கின்றவர்களை விஞ்ஞானபூர்வமான முறைப்படி அடக்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபானம் (WHO) வழிகாட்டல் வெளியிட்டதுடன் அதனை உலகில் பல நாடுகள் நடைமுறைப்படுத்துக் கொண்டிருக்குக் போது, எமது இலங்கை நாட்டில் மாத்திரம் கொவிட்-19 யினால் மரணிப்போர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு பலவந்தமாக எரிக்கப்படுகின்றமையானது எந்தவொரு விஞ்ஞான ரீதியிலான செயற்பாடுகளுமின்றி, இனவாத ரீதியான செயற்பாடாகும். இது எம்மை மிக மன வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 


கடந்த நாட்களில் எமது நாட்டில் பிறந்து 20 நாட்களேயான குழந்தையை கூட விட்டு வைக்காமல் இந்த நாட்டில் எரித்துள்ளமை எமக்கு வேதனை தருகிறது.  கடந்த வாரம் ”ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தரப்படும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  பாராளுமன்றில் தெரிவித்திருந்த  கருத்து எனக்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது அதற்கு நீங்களும் நன்றி தெரிவித்திருந்தீர்கள்.

அதுபோல், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் எனது தந்தை கூட நன்றி தெரிவித்திருந்தனர். ஆனால் அதன் பின் அரச தரப்பை சேர்ந்த சில அரசியல்வாதிகள் அடக்குவதற்கு அனுமதி தர முடியது என தெரிவித்தமையானது எம் மனதை காயப்படுத்திவிட்டது. 


உங்கள் வருகை எமக்கு ஓர் புதிய உத்வேகத்தை தந்தது. நீங்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றுவீர்கள் என ஆவலுடன் எதிர்ப்பாத்திருந்தேன், எனினும், பாராளுமன்றில் நீங்கள் ஜனாசா விடயம் குறித்து உரையாற்றிவிடுவீர்களோ? எமது முஸ்லிம் தலைவர்களை சந்தித்து விடுவோர்களோ என்ற அச்சத்தினால் இறுதி நேரத்தில் உங்கள் பாராளுமன்ற உரை இரத்தாகிவிட்டதாக எண்ணத்தோன்றுகின்றது. நாம் மிகவும் மனம் நொந்து போயுள்ளோம்.

எமது ஜனாசாக்களை அடக்கும் உரிமையை பெற மிக அர்ப்பணிப்புடன் முயற்சி செய்தும் முடியாமல் உள்ளது. நீங்கள் உலக நாட்டின் பலம்பொருந்திய முஸ்லிம் தலைவர் என்ற வகையில் உங்களிடம் மிக தயவாய் கேட்கின்றேன்.


உலக நாடுகள் அனைத்திலும் அமுல் படுத்தப்பட்டுள்ள கொவிட்-19 இனால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கும் உரிமையை இலங்கை மட்டும் நிராகரித்துள்ளது.

எனவே இலங்கை நாட்டுடன் சிறந்த நட்புறவைக் கொண்டுள்ள நீங்கள் எமது “ஜனாஸாவை அடக்குவதற்கான” உரிமையை இந்த அரசுடன் பேசி பெற்றுத்தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன். 
என 13 வயதைக்கொண்ட அம்மார் ரிஷாத் ஆங்கில வடிவில் ஒளிப்பதிவு செய்து பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.

Related posts

கன்னியா விவகாரம்! சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்

wpengine

ராஜபக்ஷவிற்காக தியாகம் செய்ய இருக்கின்றோம் என்று சொன்னவர்கள் தலைமறைவு

wpengine

உற்பத்தி செய்யாத தொழிற்சாலைகள் நாட்டுடமையாக்கப்படும்: வெனிசுவேலா அதிபர்

wpengine