பிரதான செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது 04ம் திகதி விவாதம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ம் திகதி விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடந்த கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

குறித்த பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கையில்லாமல் போவதற்கான 14 காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவிர ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நான்கு உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.

Related posts

மட்டக்களப்பு ஜெயராஜ்ஜின் புதிய கண்டுபிடிப்பு

wpengine

வில்பத்து சரணாலய வீதி வழக்கில் முன்னால் அமைச்சர் றிஷாட் 04வது பிரதிவாதி

wpengine

இஸ்ரேல் இரானுவத்தின் தாக்குதல்! பலஸ்தீனத்தில் 7பேர் மரணம்

wpengine