பிரதான செய்திகள்

பிரதமரின் தேக சுகத்திற்கு இப்தார்! முன்வரிசையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்கள் பிராத்தியுங்கள்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தபால் சேவைகள் அமைச்சு மற்றும் முஸ்லிம் கலாசார திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்திற்காக துஆப் பிரார்த்தனையும் மற்றும் இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் (7) புதன்கிழமை மருதானை பெரியபள்ளிவாசலில் இடம்பெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம் ஏற்பாட்டிலும் முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் (நளீமி)ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இந் நிகழ்வில், மௌலவி அல்- காரி பைஸலினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்திற்காகவும் மற்றும் நாட்டு நலனுக்காவும் சிங்கள மொழியில் துஆப் பிரார்த்தனையும் செய்தார்.

நிகழ்வில், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌஸி, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப், அப்துல்லாஹ் மஹ்ரூப், காதர் மஸ்தான், தபால் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சின் செயலாளர் ஹப்புஆராய்ச்சி, முஸ்லிம் கலாசார திணைக்கள அதிகாரிகள், அரச உயர் மட்ட அதிகாரிகள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

தேர்தல் போட்டி யார் வெற்றி யார் தோல்வி என்ற நிலை

wpengine

15 ஆம் திகதி கூடும் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம்

wpengine

மன்னாரில் பிரபலம் வாய்ந்த மரம்

wpengine