பிரதான செய்திகள்

பிரதமரின் கூட்டத்தை நிராகரித்த ஜே.வி.பி

அலரி மாளிகையில் எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) புறக்கணித்துள்ளது.


இந்த புறக்கணிப்பை ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.


மேலும், “நாளுமன்றம் கூட்டப்பட்ட வேண்டும் அல்லது பொதுத்தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் கேட்கப்பட வேண்டும்.
இவை எதுவும் நடக்காமல் ஒரு கூட்டத்துக்கு வந்து கலந்து கொள்வதில் அர்த்தமில்லை.


எனவே, தங்களின் அழைப்புக்கிணங்க அலரி மாளிகையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் எமது கட்சி சமூகமளிக்காது” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

14ஆம் திகதி தொழில் சங்க நடவடிக்கை! வடமாகாண உத்தியோகத்தர்கள் ஆதரவு

wpengine

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை கேலி செய்த ஊர்வலம் (படங்கள்)

wpengine

பேஸ்புக் முடக்கம்! மீண்டும் பழைய நிலை

wpengine