பிரதான செய்திகள்

பிர­பல முஸ்லிம் கோடீஸ்­வர வர்த்­தகர் கடத்­தல்

கொழும்பு – பம்­ப­ல­பிட்டி – கொத்­த­லா­வல மாவத்­தையில் உள்ள தனது வீட்டின் பிர­தான நுழை­வாயில் அருகே வைத்து பிர­பல கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்­தகர் ஒருவர் கடத்­தப்ப்ட்­டுள்ளார்.

வேன் ஒன்ரில் வந்த அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­களால் நேற்று முன் தினம் நள்­ளி­ரவு வேளையில் இக்­க­டத்தல் இடம்­பெற்­றுள்­ள­தாக பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இது தொடர்பில் கடத்­தப்ப்ட்ட கோடீஸ்­வர வர்த்­த­க­ரான மொஹம்மட் சகீப் சுலைமான் (வயது 29) என்­ப­வரின் மனைவி பம்­ப­ல­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ள­தா­கவும், அந்த முறைப்­பாடு மீதான் மேல­திக விசா­ர­ணை­களை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (சி.சி.டி.) சிறப்பு பொலிஸ் குழு  முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

இந்த சம்ப்வம் குறித்து மேலும் அறிய முடி­வ­தா­வது, நேற்று முன் தினம் நள்­ளி­ரவு வேளையில் பிர­பல உன­வகம் ஒன்ரில் நண்­பர்­க­ளுடன் சேர்ந்து சாப்­பிட்­டு­விட்டு மொஹமட் சகீப் சுலைமான் எனும் கோடீஸ்­வர வர்த்­தகர் பம்­ப­ல­பிட்டி கொத்­த­லா­வல மாவத்­தையில் உள்ள தனது வீட்­டுக்கு சென்­றுள்ளார்.

வீட்டின் அருகே சென்­றுள்ள அவர் வீட்டின் பிர­தான வாயிலை திறக்­கு­மாறு மனை­விக்கு தொலை­பே­சியில் தனது காருக்குள் இருந்­த­வாறே அறி­வித்­துள்ளார்.

இதன்­போது வீட்­டுக்குள் இருந்து வெளியே வந்­துள்ள மனைவி பிர­தான வாயிலை திறந்­துள்ளார். திறக்கும் போது, காரில் இருந்த தனது கண­வ­ரான கோடீஸ்­வர வர்த்­த­கரை வேனொன்றில் வந்த அடை­யாளம் தெரி­யாத நபர்கள் கடத்திக் கொண்டு செல்­வதை தான் கண்­ட­தாக மனைவி நேற்று பம்­ப­ல­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்டில் தெரி­வித்­துள்ளார்.

இந் நிலையில் இந்த விடயம் குறித்து விசா­ர­ணைகள் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் பாலித்த பணா­மல்­தெ­னிய அகி­யோரின் மேற்­பார்­வையில் பம்­ப­ல­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழான குழு­வொன்­றினால் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளது.

இதனை விட இது குறித்து சிறப்பு விசா­ரணை செய்யும் பொறுப்பு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டி சொய்­ஸாவின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் சந்­தி­ர­தி­லக, மற்றும் அதன் பொறுப்­ப­தி­காரி  நெவில் டி சில்வா ஆகி­யோரின் கீழான சிறப்புக் குழு­விடம் கைய­ளிக்­கப்பட்­டுள்­ளது.

நேற்று மாலை வரை­யி­லான விசா­ர­ணை­களில் கடத்­த­லுக்­கான கார­ணமோ, கடத்தல் காரர்கள் யார் என்­பதோ தெரி­ய­வந்திருக்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் கடத்தல் காரர்­க­ளுடன் குறித்த வர்த்­தகர் போரா­டி­யுள்ள­மைக்­கான தட­யங்­களை குற்றத் தடுப்புப் பிரி­வினர் கண்­ட­றிந்­துள்­ளனர்.

அதன்­படி வர்த்­த­கரின் கைக்­க­டி­காரம் கடத்தல் இடம்­பெற்ற இடத்­தி­லி­ருந்து மீட்­கப்பட்­டுள்­ள­துடன் அவ்­வி­டத்தில் போராடும் போது வர்த்­த­க­ருக்கு ஏற்­பட்ட காயத்­தி­லி­ருந்து சிந்­தி­யி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கத்­தக்க இரத்தக் கறை­க­ளையும் பொலிஸார் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

குற்றத் தடுப்புப் பிரிவின்  மேல­திக விசா­ர­ணை­களில், விசா­ர­ணை­க­ளுக்கு தேவை­யான மேலதிக தக­வல்கள் சிலவும் கிடைக்கப் பெற்­றுள்­ளன. குறித்த கோடீஸ்­வர வர்த்­தகர் வெளி நாட்­டி­லி­ருந்து உடை­களை இறக்­கு­மதி செய்யும் பிர­தான இறக்­கு­ம­தி­யாளர் எனக் கூறும் பொலிஸார் குறித்த வர்த்­த­கரைப் பலர் மோசடி செய்­துள்­ள­தா­கவும் அது தொடர்பில் அவ்­வர்த்­தகர் குற்றப் புல­னாய்வுப் பிரிவு  மற்றும் மோசடி தடுப்புப்  பிரிவு ஆகி­ய­வற்றில் நான்கு முறைப்­பா­டு­களை செய்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

தனக்கு 4 மற்றும் 3 கோடி ரூபா மோசடி செய்த இருவர் குறித்து  வர்த்­தகர் குற்றப் புல­னாய்வு பிரி­விலும் 45 மற்றும் 35 இலட்சம் ரூபா மோசடி செய்த்வர்கள் குறித்து மோசடி தடுப்புப் பிரிவிலும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந் நிலையில் வர்த்தகருக்கு மோசடி செய்தோர் அதிலிருந்து தப்பிக் கொள்ள  இந்த கடத்தலை முன்னெடுத்தனரா என்ற கோணத்திலும் மேலும் சில சந்தேகிக்கத்தக்க தடயங்களை மையப்படுத்தியும் விசாரணைகள் தொடர்கின்றன.

Related posts

தற்போதைய நிலையில் இந்த ஆண்டில் தேர்தலொன்று நடைபெறும் சாத்தியம் இல்லை!

Editor

கண்டி பாடசாலை குறைகளை கேட்டறிந்த அமைச்சர் ஹக்கீம்

wpengine

சித்தாண்டி சின்னவெளியில் அறுவடை நிகழ்வு (படங்கள்)

wpengine