பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தனது செயற்பாடுகளில் இருந்து முற்றாக பின்வாங்கி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய போது ஞானசார தேரர் கண்ணீர் விட்டு அழுததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் காணொளி ஒன்றும் வெளியாகி உள்ளது.
இதன் மூலம், இது வரை காலமும் யாருக்கும் அடங்க மாட்டேன் எனத் தெரிவித்து வந்த ஞானசார தேரர் தற்போது அடங்கி விட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், தான் அடையாளப்படுத்தி வைத்துள்ள பிரச்சினைகளை ஒழுக்கமானவர்களும், தர்மத்தைப் பேணுகின்றவர்களும் இனிமேல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வேறு எதுவும் என்னால் கூறமுடியாது எனவும் ஞானசார தேரர் நேற்று ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
தலைமறைவாகி இருந்த தேரர் திடீரென சரணடைந்து பின்னர் தனது போராட்டங்களை ஏனையவர்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அண்மைக்காலமாக ஓர் வீரராகவும் பௌத்தத்திற்கு தலைவராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஞானசாரர் தற்போது அதற்கு முற்றிலும் முரண்பட்ட வகையில் நடந்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.