Breaking
Mon. Nov 25th, 2024

ஆண்கள் காலம், காலமாக பின்பற்றி வரும் பழக்கம் ஒன்று அபாயகரமானது என தெரியவந்துள்ளது.


கடந்த சில காலமாகவே ஆண்கள் சிறிதளவு அறிந்து வைத்திருந்தாலும், இதன் அபாயம் இவ்வளவு தாக்கத்தை உண்டாக்கும் என்பதை அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஆம், பின்புற பாக்கெட்டில் பேர்ஸ் வைப்பதால் தான் ஒருசில உடல்நல கோளாறுகளால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது.

அதிலும் சில ஆண்களின் பேர்ஸ் எப்போதும் மிகப் பெரியதாக இருக்கும். நியூயொர்க்கை சேர்ந்த மருத்துவர் ஒருவர், பின்புற பாக்கெட்டில் மிகப் பெரிய பர்ஸை வைத்திருக்கும் ஆண்களுக்கு இடுப்பு, முதுகு, கழுத்து போன்ற இடங்களில் அதிக வலி ஏற்படும் அபாயம் இருக்கிறது என கூறியுள்ளார்.

பின்புற பாக்கெட்டில் பேர்ஸ் வைத்து பயன்படுத்துவதால் நாள்ப்பட இடுப்பு மற்றும் தண்டுவட பகுதியில் சமநிலையின்மை உண்டாகும் இதனால், அசௌகரியங்கள் அதிகரிக்கும் என
தெரிவிக்கிறார்.

இதனால் ஒருபக்கம் உயரமாகவும், ஒரு பக்கம் இறக்கமாகவும் உடல் நிலை அமைகிறது, இது இடுப்பில் இருந்து கழுத்து வரை பாதிப்பை உண்டாக்குகிறது. மற்றுமொரு மருத்துவர், பின்புற
பாக்கெட்டில் பேர்ஸை வைத்துக் கொண்டு அதிக நேரம் உட்கார்ந்து இருப்பதால், உடல் நாள்பட
சிறிதளவு ஒருபக்கம் ஏற்றமாகவும், ஒரு பக்கம் இறக்கமாகவும் நிலை பெறும்.

இதுப்போக போக, தண்டுவடம், தசைகள், டிஸ்க் பகுதிகளை வலுவாக பாதிக்கும். நாம் உட்காரும் நிலையானது தண்டுவடம் நேராக இருப்பது போல இருக்க வேண்டும். இதனால், தான் அதிக நேரம் சரியான நிலையில் இல்லாமல் சாய்ந்து உட்காருதல் தவறு என கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, பின்புற பாக்கெட்டில் அதிக நேரம்பேர்ஸ் வைத்திருப்பதால், பின் பகுதியில் இருக்கும் நரம்புகள், தசைகள், தமனிகள் மற்றும் சிரைகள் போன்றைவை சேதமைடைய
காரணியாக இருக்கின்றது.

இன்று ஆண்கள் மத்தியில் கழுத்து, முதுகு மற்றும் இடுப்பு வலி அதிகரிக்க இந்த பழக்கம் ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது.

ஏறத்தாழ 5-15 வருடங்கள் தொடர்ந்து இந்த பழக்கம் இருக்கையில் உடலில் அசௌகரியங்கள் அதிகரிக்கும் அபாயம் நிறையவே இருக்கின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *