பிரதான செய்திகள்

பிக்கு ஒருவரின் சமூக வலைத்தள பதிவு! மாவனல்லைக்கு பாதுகாப்பு கொடுங்கள்

மாவனெல்லையில் உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்துமாறு அமைச்சர் கபீர் ஹாசிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவனெல்லைப் பகுதியில் நேற்று முதல் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக வன்முறை சம்பவங்கள் ஏற்படலாம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக மாவனெல்லை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பரவும் பதிவுகளினால் குழப்ப நிலை ஏற்படுவதனை தவிர்ப்பதற்காக உடனடியாக பாதுகாப்பு அவசியமான உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மதத்தற்காக நாளை தினம் ஒன்று கூடுமாறு தேரர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளதாக பேஸ்புஸ் ஊடாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

வன்முறைகளை தூண்டும் வகையிலான பேஸ்புக் பதிவுகள் பரவதனால் குழப்பங்கள் ஏற்படுவதனை தவிர்ப்பதற்காகவும் பாதுகாப்பு வழங்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

இலஞ்சம் பெற்ற குற்றத்துக்கு 56 ஆண்டு கடூழிய சிறை இலங்கையில் .

Maash

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் பதவியினை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை

wpengine

World Islamic Conference President mythreepala Sirisena participated

wpengine